22 ஆண்டுகளுக்கு பிறகு அழகி திரைப்படத்தில் நடித்ததற்கான காரணத்தையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்ட தேவயானி…

தேவயானி தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து 90 களில் மிக பிரபலமாக முன்னனி நடிகையாக வலம் வந்தவர். 1996 ஆம் ஆண்டு ‘காதல் கோட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அடுத்ததாக 1997 ஆம் ஆண்டு ‘சூரியவம்சம்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இவ்விரு படங்களும் நடிகை தேவயானிக்கு மாபெரும் வெற்றியையும் புகழையும் பெற்றுத் தந்தது. இந்த இரண்டு படங்களில் நடித்ததற்காக தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றார். பின்னர் 1998 இல் ‘நினைத்தேன் வந்தாய்’, 1999 இல் ‘நீ வருவாய் என’, 2000 ஆண்டில் ”பாரதி’ மற்றும் ‘தெனாலி’, 2001 ஆண்டில் ‘ஆனந்தம்’, 2002 ஆம் ஆண்டில் ‘அழகி’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்திருந்தார்.

வெள்ளித்திரையில் மட்டுமல்லாது சின்னத்திரையில் 2003 ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை சன் டிவியின் ‘கோலங்கள்’ என்ற தொடரில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதில் இடம் பிடித்தார்.இந்த தொடர் 1533 எபிசோடுகளைக் கொண்டது ஆகும். இதன் மூலம் நடிகை தேவயானி கலைமாமணி விருதும் பெற்றார்.

இந்நிலையில் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘அழகி’ திரைப்படம் தற்போது 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து நடிகை தேவயானி ‘அழகி’ திரைப்படத்தில் நடித்ததற்கான காரணத்தையும், அனுபவங்களையும் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், ‘அழகி’ திரைப்படம் என் திருமணம் முடிந்த பிறகு நான் நடித்த முதல் படம். தங்கர்பச்சன் அவர்கள் ‘அழகி’ திரைப்படத்தின் கதையை சொல்லும் போது அந்த மனைவி ரோல் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அது அந்த படத்தில் ஒரு உண்மையான கதாபாத்திரம் ஆகும்.

அந்த கதாபாத்திரம் ஒரு உண்மையான மனைவியின் குணத்தை எடுத்துச் சொல்லும். எந்த ஒரு மனைவியும் தனது கணவனை வீட்டுக் கொடுக்க மாட்டாள். கணவருக்கு கடந்த காலத்தில் காதல் இருந்தாலும் கூட நிகழ்காலத்தில் இருப்பது மனைவி தான். அந்த எமோஷனை அழகாக காட்டியிருப்பார் இயக்குனர் தங்கர்பச்சான். இந்த படம் பெண்களை விட ஆண்களுக்கு தான் மிகவும் பிடித்திருந்தது. ஏனென்றால் ஆண்களுக்கு சிறுவயது காதல் இருந்திருக்கும் அதை இந்த படம் எங்கோ அவர்களது கடந்த காதலை தொட்டுச் சென்றிருக்கும் என்று நினைக்கிறன். மேலும் இந்த ‘அழகி’ ரீ-ரிலீஸ் ஆகவிருப்பது எனக்கு மிகவும் சந்தோசத்தை கொடுக்கிறது என்று கூறியிருந்தார் நடிகை தேவயானி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...