நடனம், நடிப்பு மட்டுமில்ல.. அதையும் தாண்டி ராஜு சுந்தரத்திற்கு இருந்த வேறொரு முகம்..

பிரபுதேவாவின் சகோதரர் ராஜூ சுந்தரம் ஒரு  நடன இயக்குனர் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் அவர் ஒரு சில படங்களில் நடனம் ஆடி உள்ளார் என்பதும் தெரியும். ஆனால் அவர் ஒரு நடிகர் என்பதும் பல படங்களில் அவர் நடித்துள்ளார் என்பதும் பலருக்கும் தெரியாத உண்மையாகும்.

அதிலும் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’ஜீன்ஸ்’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ராஜு சுந்தரம் நடித்திருந்தது இன்றுள்ள 2K கிட்ஸ் பலருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை. ஐஸ்வர்யா ராயுடன் அவர் இணைந்து நடித்த காட்சிகள் அனைத்தும் காமெடியாக இருக்கும். இதனைத் தொடர்ந்து என் சுவாச காற்றே திரைப்படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

raju sundaram1

இதனை அடுத்து ’123’ என்ற படத்தில் தனது சகோதரர்களான பிரபுதேவா மற்றும் நாகேந்திர பிரசாத் ஆகிய இருவருடனும் நடித்திருப்பார். மேலும் வினய் நடித்த ’உன்னாலே உன்னாலே’  ஜெயம் ரவி நடித்த ’எங்கேயும் காதல்’ ஆகிய படங்களில் நடித்த நிலையில் ’ஜூலை’ என்ற திரைப்படத்தில் ராஜு சுந்தரம் என்ற அவரது சொந்த கேரக்டரில் நடித்திருப்பார்.

மேலும் எஸ் ஜே சூர்யா நடித்து இயக்கிய ’இசை’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த ராஜசுந்தரம், ஆர்யா, அனுஷ்கா செட்டி நடித்த ’சைஸ் ஜீரோ’ என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இது தவிர ஏராளமான திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியும் பெயர் எடுத்தவர் ராஜு சுந்தரம். அதிலும் குறிப்பாக ஜென்டில்மேன் திரைப்படத்தில் இடம்பெற்ற சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே என்ற பாடல் மிகப்பெரிய அளவில் இன்று வரையிலும் வைரலாகி வருகிறது.

நடனம், நடிப்பு தவிர அஜித் நடித்த ’ஏகன்’ என்ற திரைப்படத்தை ராஜூ சுந்தரம் இயக்கி உள்ளார். அவரது இயக்கத்தில் உருவான ஒரே திரைப்படமும் இதுதான்.

raju sundaram2

தற்போது 53 வயதாகும் ராஜசுந்தரம் இன்னும் சில படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். குறிப்பாக விஜய் நடித்து வரும் ’கோட்’ என்ற திரைப்படத்தில் அவர் ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுக்கு அவர் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது அவரது திரை பயணத்தில் மிக முக்கியமான ஒரு மைல்கல்லாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.