டபுள் சந்தோஷத்தில் CWC புகழ் : புகழுக்கே புகழா?!

விஜய் டிவியில் கம்ப்யூட்டர் மேனாக இருந்து CWC நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்குச் சென்றவர்தான் புகழ். கடலூரைப் பூர்வீகமாகக் கொண்ட புகழுக்கு மீடியா ஆசை வர தன்னுடைய மிமிக்ரி கலை மூலமாக விஜய்டிவியில் வேலைக்குச் சேர்ந்தார். அதன்பின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் காமெடியில் கலக்க மீடியாக்களின் கவனம் ஈர்த்தார். தொடர்ந்து விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் தோன்றியவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரும் வரவேற்பைக் கொடுத்தது.

கேமாளிகளுடன் இவர் செய்யும் காமெடிகளைப் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அதன்பின் நடிப்பு, காமெடி, ரியாலிட்டி ஷோ எனப் பிரபலம் ஆனார். இந்நிலையில் அவருக்கு கடந்த வருடம் திருமணம் ஆக அண்மையில் குழந்தை பிறந்தது. மேலும் குழந்தையின் பெயர் சூட்டுவிழா, தொட்டிலில் இடும் நிகழ்ச்சி போன்றவற்றை  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Pugazh

தற்போது தந்தையாகி இருக்கும் மகிழ்ச்சியில் புகழுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தியால் திக்குமுக்காடிப் போயிருக்கிறார். ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில், கௌதம் கார்த்தி நடிப்பில் பொன்குமார் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான படம் தான் ஆகஸ்ட் 16, 1947. இத்திரைப்படத்தில் புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சுதந்திரம் பெற்றது கூட தெரியாமல் இருக்கும் ஒரு கிராமத்திற்கு சுதந்திரம் பெற்ற செய்தியை புகழ் எவ்வாறு சொல்கிறார் அந்தக் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

தக் லைஃப் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா?.. ஒவ்வொரு ஃபிரேமும் பக்காவா அப்படியே இருக்கே ஆண்டவரே!..

இதில் சிறப்பு என்னவென்றால் ஆங்கிலேயே தளபதி புகழ் நாக்கை அறுத்துவிட பேச முடியாமல் தவிக்கும் இவரின் நடிப்பு காமெடி கலந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கும். தற்போது இந்தப் படத்திற்காகத் தான் விருதினைப் பெற்றுள்ளார் புகழ். இலண்டனில் நடந்த திரைப்பட விழாவில் Best Performer விருதினைப் பெற்றுள்ளார்.

இவ்விருது குறித்து சோஷியல் மீடியாவில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ஆகஸ்ட் 16, 1947 படத்திற்காக Best  Performer விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக அத்திரைப்படத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து போராடுவது போல் நடித்த எனக்கு, அவர்கள் மண்ணிலேயே விருது பெற்றது, என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். வாய்ப்பு அளித்த அனைவருக்கும் மிகப்பெரிய நன்றிகள் என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

விருது பெற்ற புகழுக்கு தற்போது பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews