தக் லைஃப் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா?.. ஒவ்வொரு ஃபிரேமும் பக்காவா அப்படியே இருக்கே ஆண்டவரே!..

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள படத்திற்கு தக் லைஃப் என தலைப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினர். ஆனால், அதற்குள் அந்த இன்ட்ரோ காட்சிகள் எங்கிருந்து சுடப்பட்டது என்றும் அந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா? என்கிற ட்ரோல்களும் பரவி வருகின்றன.

நடிகர் கமல்ஹாசன் பல ஹாலிவுட் படங்களை இன்ஸ்பயர் செய்து பல தமிழ்ப் படங்களை உருவாக்கி உள்ளார். நாயகன் படமே காட் ஃபாதர் காப்பி என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தக் லைஃப் ஹாலிவுட் படத்தின் காப்பியா?

அவ்வை சண்முகி திரைப்படம் மிஸ்டர் டவுட்ஃப்யர் படத்தின் ரீமேக் என்றும் பஞ்ச தந்திரம் உள்ளிட்ட பல படங்கள் ஹாலிவுட் படங்களின் இன்ஸ்பிரேஷன் அல்லது காப்பி தான் என கலாய்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது உருவாக உள்ள தக் லைஃப் திரைப்படம் ஸ்டார் வார்ஸ் படங்களின் வரிசையில் வெளியான அந்த பிரபல படத்தின் காட்சிகளை கம்பேர் செய்து ட்ரோல்கள் பறக்கின்றன.

நடிகர் கமல்ஹாசன் 69வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி உடனான பிரச்சனை காரணமாக அவருக்கு எதிராக பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் ஒரு பக்கம் கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு போக வேண்டும் என பிரச்சனை செய்து வருகின்றனர். மறு பக்கம் தக் லைஃப் படமும் காப்பி தான் என கிண்டல்கள் கிளம்பி உள்ளன.

உலகளவில் பிரபலமான ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர் படத்தில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்ட காட்சிகளை ஒட்டுமொத்தமாக உருவி இப்படியொரு தக் லைஃப் இன்ட்ரோ காட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக ரஜினி ரசிகர்கள் கமல்ஹாசனை கலாய்த்து வருகின்றனர்.

ஸ்டார் வார்ஸ் படங்களிலேயே ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் மணிரத்னம் கமல்ஹாசனை வைத்து இன்னொரு நாயகன் படத்தை கொடுப்பார் என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இப்படியொரு நெகட்டிவிட்டியும் பரவி வருவது பலரையும் அப்செட் ஆக்கி உள்ளது.

ஆனால், இது அறிமுக காட்சியாக மட்டுமே இருக்கும் என்றும் மணிரத்னம் கமல்ஹாசனை வைத்து வேற விதமான கதையை படமாக்கி மிரள விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் உடன் இணைந்து நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் மற்றும் த்ரிஷா இந்த படத்தில் நடிக்க உள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews