எம்மாடியோ! ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,575-க்கு விற்பனை..!!!

சத்திய மங்கலம் மலர் சந்தையில் ஒரே நாளில் பூக்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் பகுதியில் சுமார் 1000 ஏக்கரில் மல்லிகைப்பூ சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பூக்கள் கர்நாடகா, கேரளா போன்ற முக்கிய நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதற்கிடையில் தொடர் மழைப்பொழிவு, சுப நிகழ்வுகள் காரணமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

அதன் படி, மல்லிகைப்பூக்களின் விலை ஒரே நாளில் ரூ.700 அதிகரித்து கிலோவுக்கு ரூ.1575-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், முல்லை ரூ.700 ஆகவும், காக்கடா ரூ.430, ஜாதிமல்லி ரூ.750 ஆக விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.