செய்திகள்

மீண்டும் துவங்கியது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை…!

ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியது.

இந்த பயங்கர விபத்தில் 288 பேர் பலியானதாக கூறப்பட்டது. ஆனால் ஒரு சில சடலங்கள் இரண்டு முறை எண்ணி கணக்கிடப்பட்டதால் தவறுதலாக கணக்கிடப்பட்டு விட்டது பலியானோரின் எண்ணிக்கை பின்பு 275 என்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் அதிவேகமாக நடைபெற்றது. மீட்புப் பணிகளுக்குப் பிறகு ரயில் சேவை மீண்டும் தொடங்குவதற்கான மறு சீரமைப்பு பணிகள் துவங்கின.

விபத்து ஏற்பட்டு 51 மணி நேரத்திற்கு பிறகு மறு சீரமைப்பு பணிகள் முடிவு பெற்று நேற்று இரவு மீண்டும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை குறைந்த வேகத்தில் தொடங்கியுள்ளது.

முதலில் சரக்கு ரயில் சேவை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் தொடங்கியது. அதன் பிறகு பயணிகளுக்கான ரயில் சேவை குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டது.

ரயில் விபத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Published by
Sowmiya

Recent Posts