மின்சார பில்லே இனி கட்ட வேண்டாம்.. மாறுங்கள் சோலார் மின்சாரத்திற்கு..!

ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினருக்கு கரண்ட் பில் என்பது ஒரு மிகப்பெரிய சுமையாக உள்ளது என்பதும் குறிப்பாக 500 யூனிட்டுக்கு மேல் அதிகமாக மின்சாரத்தை உபயோகிக்கப்பட்டு விட்டால் இருமடங்கு, மும்மடங்கு மின்சார பில் கட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மின்சார பில் கட்டாமல் சோலார் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தினால் மின்சார பில் குறித்த எந்த விதமான கவலையும் இன்றி இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்து வரும் டெக்னாலஜி உலகில் சூரிய மின்சாரத்தை பல நாடுகள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றன. சூரிய ஒளி மூலமாக அவரவர் வீடுகளுக்கான மின்சாரத்தை அவரவர் தயாரித்துக்கொள்ளும் முறைதான் சோலார் மின்சாரம். இதற்கு அரசு 40% வரை மானியம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஒரு சிலர் மட்டுமே சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது பலர் பயன்படுத்தி தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. எலக்ட்ரிக் பைக், எலக்ட்ரிக் கார் பயன்பாடு காரணமாக பெட்ரோல் டீசல் பயன்பாடு குறைந்துள்ளது போல் சோலார் மின்சாரத்தை பயன்படுத்துவதன் மூலம் மின் கட்டணத்தை முழுவதுமாக குறைத்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடுத்தர வர்க்கத்தினருக்கு குறைந்தது 3000 ரூபாய் வரை கரண்ட் பில் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரே ஒருமுறை செலவு செய்து சோலார் மின்சார பேனலை அமைத்து விட்டால் 20 ஆண்டுகளுக்கு கவலை இல்லை என்பதும் மின்சார பில் பற்றிய எந்த விதமான கவலையும் படாமல் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை செலவு செய்து சோலார் பேனர்களை அமைத்து விட்டால் குறைந்தது 20 ஆண்டுகளுக்கு பயன்பெற முடியும் என்று பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் சில தங்களுக்கான மின் தேவை போக மின்வாரியத்திற்கு மின்சாரத்தை விற்பனை செய்து வருகின்றனர் என்பதும் அதன் மூலம் வருமானமும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சோலார் பேனல் அமைப்பதற்கு அரசு 40% மானியம் அளிப்பது பலருக்கு இந்த பேனலை தங்கள் வீடுகளில் அமைக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு கிலோ வாட் சோலார் மின்சாரம் அமைப்பதற்கு மூன்று லட்சம் செலவு ஆகும் என்றாலும் அதில் சுமார் 75 ஆயிரம் ரூபாய் வரை அரசின் மானியம் கிடைப்பதால் இரண்டேகால் லட்சம் செலவு செய்தால் போதும். ஒரே ஒரு முறை இந்த செலவு செய்து விட்டால் அதன் பிறகு மின்சார பில் வாழ்க்கைக்கும் கட்ட வேண்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Bala S

Recent Posts