கை கொடுத்த விளையாட்டு.. கபடி முதல் கிரிக்கெட் வரை ஹிட் கொடுத்த விஷ்ணுவிஷால்

சினிமாவில் அறிமுகமாகத் துடிக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு பின்புலம் இருக்கும். சிலர் அரசு வேலையில் இருப்பார்கள். சிலர் சினிமாவுக்காகவே வாய்ப்புத்தேடி அலைவார்கள். சிலர் வேறு சில பணிகளில் இருந்து கொண்டே சினிமா வாய்ப்புத் தேடுவார்கள். ஆனால் விளையாட்டிலிருந்து முதன் முறையாக தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ அறிமுகமாகியிருக்கிறார் என்றால் அது நடிகர் விஷ்ணு விஷாலாகத்தான் இருக்க முடியும். கிரிக்கெட் விளையாட்டில் தீராத மோகம் கொண்டு விளையாடி வந்த விஷ்ணு விஷால் ஆரம்பத்தில் தனது பெயரை விஷ்ணு என்றே குறிப்பிட்டு வந்தார்.

இந்நிலையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டே சினிமா வாய்ப்பும் தேடிக் கொண்டிருந்த விஷ்ணுவுக்கு 9 படங்கள் வரை கையை விட்டுப் போயிருக்கிறது. அதில் விஜய் ஆண்டனி நடித்த நான், ஜீவா நடித்த டிஷ்யூம் போன்ற படங்கள் அனைத்தும் இவருக்கு வந்த வாய்ப்புகள் தான்.

“உங்க வேலைய மட்டும் பாருங்க.. இனிமேல் இளையராஜாவை சீண்டுனா..” வைரமுத்துவுக்கு எதிராக கோபத்தில் பொங்கிய கங்கை அமரன்

இப்படி தொடர் முயற்சிகளால் ஒருவழியாக 2009-ல் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலாக் கபடிக்குழு பட வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தப் படத்தில் சுசீந்திரன் எதிர்பார்த்தது போல் அவரது தோற்றம் இல்லாதிருக்க அதற்காக தனது உடலை கதாபாத்திரத்திற்குத் தகுந்தவாறு மாற்றி அவர் முன் வந்து நிற்க பிறகு ஒகே சொல்லி வெண்ணிலா கபடிக்குழுவில் ஹீரோவாக நடிக்க வைத்திருக்கிறார் சுசீந்திரன். சூரிக்கும் இந்தப் படம் அவரது திரை வாழ்க்கையே மாற்றிது குறிப்பிடத்தக்கது.

தனது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக விளையாட்டை நேசித்தவருக்கு முதல் படமே கபடி வீரராக நடிக்க வாய்ப்பு வர அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. இவரது படங்கள் சுமாரான வெற்றியைப் பெற மீண்டும் அடுத்த கிரிக்கெட்டை மையப்படுத்தி அடுத்த விளையாட்டுப் படமான ஜீவா அவரது குருநாதர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியானது. இந்தப் படமும் நல்ல வரவேற்பினைப் பெற தொடர்ந்து கவனிக்கத்தக்க ஹீரோவானர் விஷ்ணு. தனது பெயரை விஷ்ணு விஷால் என மாற்றிக் கொண்டார்.

தொடர்ந்து ராட்சசன் படம் இவருக்கு நல்ல திருப்புமுனையைக் கொடுத்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு விளையாட்டு சார்ந்த படம் இவருக்குக் கை கொடுத்தது. அந்தப் படம் தான் கட்டா குஸ்தி. இந்தப் படத்திலும் மல்யுத்த வீரராக நடிக்க, கடைசியாக இவர் நடித்த லால் சலாம் படமும் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுத்தது தான்.

இவ்வாறு விஷ்ணு விஷாலுக்கு இயற்கையாகவே அவர் நடித்த பெரும்பாலான படங்களில் விளையாட்டு சார்ந்த கதைகளாகேவே அமைந்து அந்தப் படங்கள் அவருக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறது.

Published by
John

Recent Posts