அவரு அன்னைக்கு என் மனசுக்குள்ள ரொம்ப நின்னுட்டாரு… தீபாசங்கர் யாரைச் சொல்கிறார்னு தெரியுமா?

சவுத் மூவி விருதுகள் எனப்படும் சைமாவில் காமெடி நடிகைக்கான விருதை நடிகை தீபா சங்கரும், காமெடி நடிகராக ரெடின் கிங்ஸ்லியும் பெற்றனர். இந்த விழாவில் நடிகை தீபா சங்கர் கலகலப்பாக வெள்ளந்தியாக தனது சினிமா உலக அனுபவங்களை இவ்வாறு எடுத்துரைத்தார்.

டாக்டர் படத்துல நடிச்சதுக்கு.. நெல்சன் தம்பி, சிவக்கார்த்திகேயன் தம்பிக்கு எல்லாத்;துக்கும் ரொம்ப நன்றி. கடைக்குட்டி சிங்கம் படத்துல தான் நான் அறிமுகம்.

சின்னப்பிள்ளைல எனக்கு அவார்டு குடுப்பாங்க. முதல்ல சன்டிவில நடிச்சிக்கிட்டு இருந்தேன். நடிகர்கள்லாம் கலர் கலரா டிரஸ் போட்டுருக்காங்களோன்னு ஆச்சரியப்படுவேன். டாக்டர் படத்துல வந்து சிவகார்த்திகேயன் தம்பி கூட ஒரு அக்காவா நெருங்கிப் பழகுனேன்.

என்னை சாப்பிடக் கூட்டிட்டுப் போவாங்க. எனக்கு சாப்பாடு ரொம்பப் பிடிக்கும்னுட்டு. அப்ப ஐஸ்கிரிம் வாங்கிக் கொடுத்தாங்க. இதைப் போயி பப்ளிக்கா சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்கிடாதீங்க. நான் வந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன்.

SK
SK

நான் வந்து சாப்பிடும்போது எச்சி ஐஸ்கிரீம் ஆயிட்டு. அவங்க என்னோட ஐஸ்கிரீம எடுத்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. அய்யா இது என்னோட ஐஸ்கிரீம்னு சொன்னேன். யக்கா அதனால என்னக்கான்னு கேட்டாரு. அன்னைக்கே என் மனசுக்குள்ள ரொம்ப நின்னுட்டாரு.

ஒரு பேட்டில எனக்கு தீபாக்காவ பிடிக்கும்னு சொல்லிட்டாரு. எல்லாரும் கதாநாயகியைத் தானே பிடிக்கும்னு சொல்வாங்க. தீபாக்காவைப் பிடிக்கும்னு சொல்லிட்டாரேன்னு… உண்மையிலேயே நான் லைப் லாங் மறக்கவே மாட்டேம்மா…

என்டம்மே ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ரொம்ப நாளா அர்த்தம் தெரியாம இருந்துச்சு. அதுக்கு அர்த்தமே ஒரு குடிகாரன் பொண்டாட்டிக்கிட்டே இருந்து கம்மலைப் புடுங்கிட்டுப் போறான். அப்படின்னா ஒப்பாரி தானே வைக்கணும். யாராவது அதுக்கு டேன்ஸ் ஆடுவாங்களா? ஆனா உண்மையிலேயே ரொம்ப ரசிக்கிற மாதிரி இருக்கு.

நடிகைகள நடிகையா பார்ப்பாங்க. என்னை எல்லாரும் அக்காவா பார்க்கிறாங்க. அதுக்காக அக்காவுக்குலாம் ஆசா பாசம் எல்லாம் இருக்காம இருக்காது. எனக்கும் இருக்கு. தமிழ்நாட்டு மக்களோட கைதட்டல் தான் எனக்கு வளர்ச்சி. நான் அழுது அழுது இரக்கத்துல மக்கள்ட மனத்தை சம்பாதிச்சிட்டேன்.

இவ்வாறு தீபா சங்கர் கலகலவென பேசி கமல், சிம்பு, விக்ரம், சிவகார்த்திகேயன் என பார்த்துக்கொண்டிருந்த நடிகர்கள் மற்றும் நடிகைகளை கலகலப்பாக்கினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.