சிரிப்பிலேயே காமெடி செய்த மதன்பாப்.. நடிப்பை தாண்டி இருந்த மற்றொரு அபார திறமை.. அடேங்கப்பா..

இங்கே காமெடி நடிகர்களாக இருக்கும் பலருக்கும் ஒரு வித திறமை இருக்கும். கருத்துள்ள வசனங்களை காமெடி காட்சிகளுக்கு இடையே சொல்லி விவேக் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார். அடுத்தவர்களுக்கு கவுண்டர் வசனம் கொடுத்து கவுண்டமணி சிரிக்க வைப்பதை போல, தனது உடல் மற்றும் முக பாவனைகள் மூலம் சிரிக்க வைப்பவர் வடிவேலு.

இப்படி ஒவ்வொரு காமெடி நடிகர்களும் தங்களின் திறமையுடன் சேர்த்து சிரிக்க வைப்பார்கள். ஆனால் சிரித்து சிரித்து காமெடி செய்த ஒரு நடிகர் என்றால் அவர்தான் மதன்பாப். தியாகராஜன் நடித்த நீங்கள் கேட்டவை என்ற திரைப்படத்தில் தான் அவர் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு ஒரு சில படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’வானமே எல்லை’ படம் தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் தான் அவர் தனது முத்திரை சிரிப்பை ஆரம்பித்தார். அதன் பிறகு அவர் தனது சிரிப்பாலே நகைச்சுவையை செய்தார்.

madhan bob1

ஜாதி மல்லி, எங்க தம்பி, உழைப்பாளி, உடன்பிறப்பு, திருடா திருடா, மகளிர் மட்டும், ஆசை, சுந்தர புருஷன் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். கிட்டத்தட்ட அவர் 200 படங்களில் தமிழில் மட்டும் நடித்துள்ளார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் நடுவராக கலந்து கொண்டிருந்தார்.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த மதன்பாப்பின் தந்தை ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்பது பலருக்கும் தெரியாத தகவலாகும். மேலும் அவரது தந்தை முன்னாள் முதல்வர் காமராஜரின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணியம் – பொன்னம்மாள் தம்பதிக்கு எட்டாவது மகனாக மதன்பாப் பிறந்தார். கிருஷ்ணமூர்த்தி என்பதுதான் இயற்பெயர். ஆனால் சினிமாவுக்காக அவர் மதன்பாப் என்று வைத்துக் கொண்டார்.

madhan bob

படித்து வளர்ந்தது எல்லாமே திருவல்லிக்கேணியில் தான் என்பதால் தனது ஓய்வு நேரத்தில் இசையில் கவனம் செலுத்தினார். சின்ன சின்ன பாடல்களுக்கு இசையமைத்து வந்த மதன் பாப்பிற்கு ஒரு கட்டத்தில் நடிகர் ஆக வேண்டுமென்ற விருப்பம் உருவானதாகவும் கூறப்படுகிறது. அவர் ஒரு மிகச்சிறந்த கிட்டார் இசை கலைஞராகவும் மாறினார். புத்தகம் படிப்பதில் விருப்பமுள்ளவர், அம்புலி மாமாவிலிருந்து  ஹாலிவுட் புத்தகங்கள் வரை அவர் ஏராளமாக படித்திருக்கிறார். மேலும்  தற்போது 70 வயதில் இருக்கும் நிலையிலும் சில படங்களில் நடித்து கொண்டு தான் வருகிறார். சமீபத்தில் ரிலீசான கௌதம் கார்த்திக் நடித்த ’ஆகஸ்ட் 16 1947’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

மேலும் காஜல் அகர்வால் நடித்த கோஷ்டி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது கூட அவர் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தொடர்ந்து அவருக்கான வாய்ப்புகளும் வந்து கொண்டே தான் இருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...