முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடித்த மனோரமா மகன்.. என்ன படம் தெரியுமா?

இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த நிலையில் அவருடன் மனோரமா மகன் பூபதி நடித்துள்ளார் என்ற தகவல் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆம், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நடித்த ‘ஒரே ரத்தம்’ என்ற திரைப்படத்தில் மனோரமா மகன் பூபதி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

manorama son 2

தமிழ் திரையுலகில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை செய்தவர் மனோரமா. ஆச்சி என்று அன்போடு அழைக்கப்படும் இவர் தமிழ் திரையுலகில் ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்திருந்தாலும் அவரது மகனை ஒரு பெரிய நடிகராக ஆக்க முடியவில்லை என்பது மிகப்பெரிய சோகமாகும்.

ஒரு கை ஓசை: படம் முழுவதும் ஒரு வசனம் கூட பேசாமல் கே.பாக்யராஜ் நடித்த படம்..!

திரை உலகிற்கு வரும் ஏராளமானோருக்கு மனோரமா உதவி செய்து அவர்களை பெரிய நட்சத்திரமாக உருவாக்கியுள்ளார். ஆனால் தனது மகனை அவர் சொந்த படம் எடுத்தும்கூட தான் நினைத்தபடி ஒரு நட்சத்திரமாக ஆக்க முடியவில்லை என்பது கடைசி வரை அவருக்கு ஒரு வருத்தமாகவே இருந்தது.

மனோரமா சிறு வயதில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் அவருடன் நடித்த ராமநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவரை மனோரமா திருமணம் செய்து கொண்ட நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த மகன்தான் பூபதி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மனோரமா ராமநாதன் தம்பதிகளுக்கு இடையே குழந்தை பிறந்த சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு புரிந்து விட்டனர் என்பதும் அதன் பிறகு தனது மகனை கூட பார்க்க ராமநாதன் வரவில்லை என்றும் கூறப்பட்டது.

manorama son 1

இந்த நிலையில் தன்னுடைய மகனை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதற்காக மனோரமா பல தியாகங்கள் செய்துள்ளார். மறுமணம் செய்யாமல் தனது குழந்தைக்காகவே வாழ்ந்தார்.

இந்த நிலையில் தாயார் போலவே நாடகத்தில் மனோரமாவின் மகன் பூபதி நடித்தார். தாயாரின் உதவியால் சில படங்களில் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. இருப்பினும் அவர் தனது கல்வியையும் தொடர்ந்தார். சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த அவர், படித்துக் கொண்டிருக்கும் போது பிரபல பத்திரிகையாளர் ஒருவரின் மனைவியின் தங்கையை காதலித்தார்.

தான் காதலித்து திருமணம் செய்து வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வி அடைந்ததால் மனோரமா அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் தனது மகன் காதலில் தீவிரமாக இருந்ததை அடுத்து வேறு வழியின்றி அவர் திருமணம் செய்து வைத்தார். தமிழ் திரை உலகில் உள்ள பிரபலங்கள் பலர் அந்த திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால் மனோரமா எதிர்பார்த்தது போலவே ஒரு சில வாரங்களில் தனது மகனுக்கும், மருமகளுக்கும் சண்டை வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அது மட்டுமின்றி அவரது மருமகள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றது மட்டுமில்லாமல் விவாகரத்து நோட்டீஸும் அனுப்பி இருந்தார். இதனை அடுத்து அவரது மகனும் மருமகளும் விவாகரத்து செய்து விட்டனர்.

மனைவி விவாகரத்து செய்து விட்டதால் மிகவும் மன விரக்தியில் இருந்த மனோரமாவின் மகன் பூபதி அதன் பிறகு மனதை தேற்றிக் கொள்வதற்காக மீண்டும் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். அப்போதுதான் மகேந்திரன் இயக்கத்தில் உருவான ‘உதிரிப்பூக்கள்’ என்ற திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ என்ற திரைப்படத்தில் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் கேரக்டரில் நடித்தார். மணல் கயிறு திரைப்படத்தில் எஸ்வி சேகரின் நண்பன் தங்கப்பன் என்ற கேரக்டரில் நடித்தார். அதே போல் ராணி தேனீ என்ற படத்தில் கமல்ஹாசன் உடன் நடித்தார்.

தந்தையின் சாயல் சிறிதும் இல்லாமல் நடிப்பில் வெளுத்து வாங்கிய இளைய திலகம்

இந்த நிலையில் தான் மு.க.ஸ்டாலின் நடித்த ‘ஒரே இரத்தம்’ என்ற திரைப்படத்தில் பூபதிக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் மனோரமாவும் நடித்து இருந்தார். கலைஞர் கருணாநிதி கதை, வசனம் எழுதிய இந்த படத்தை சொர்ணம் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் பிறகு மனைவி ரெடி, டெல்லி பாபு, சரணம் ஐயப்பா என ஒரு சில படங்கள் நடித்தாலும் பூபதிக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் கிடைக்கவில்லை. அதேபோல் நாயகன் கேரக்டரும் கிடைக்கவில்லை.

manorama son 3

இதனை அடுத்து மனோரமா தனது மகனுக்காக ‘தூரத்து சொந்தம்’ என்ற படத்தை தயாரித்தார். அதில் ராஜ் பூபதி என்று தனது மகனின் பெயரை மாற்றி நாயகனாக அறிமுகம் செய்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை. இந்தப் படத்தால் மனோரமா பொருளாதார நஷ்டம் அடைந்தாலும் அது பற்றி கவலைப்படாமல் மகனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கவில்லையே என்ற கவலை மட்டுமே இருந்தது.

ரஜினியின் ‘ஜானி’: இரட்டை வேடம் என்றாலே ஆள்மாறாட்ட கதை தான்.. ஆனால் இந்த படம் வித்தியாசமானது..!

இதன்பிறகு சினிமாவே வேண்டாம் என்று முடிவு செய்த பூபதி தாயார் பார்த்த தனலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது டாக்டராக உள்ளார். மனோரமாவின் மகன் பூபதி தற்போது மனைவி மற்றும் மகனுடன் சந்தோஷமாக உள்ளார். அவர் திரையுலகில் ஜொலிக்க முடியாவிட்டாலும் அழகர் தனது வாழ்க்கையில் திருப்தியாக தற்போது உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...