விஜய்யை போல அஜித்திற்கு மிரட்டலான கதை வைத்திருக்கும் இயக்குனர் அட்லீ!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக 2 படங்களில் பணியாற்றி ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இளம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் அட்லீ. 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி திரைப்படத்தை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தெறி திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்த கூட்டணி அடுத்ததாக மெர்சல் திரைப்படத்தில் இணைந்து பட்டையை கிளப்பியது. அதைத்தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் 2019 ஆம் ஆண்டு திகில் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. தளபதி விஜய்க்கு அடுத்தடுத்து மூன்று வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ பொதுவாக அனைத்து மேடைகளிலும் விஜய் தனது சொந்த அண்ணன் என்று பெருமிதத்தில் கூறிக் கொள்வது வழக்கம். அந்த அளவிற்கு இயக்குனர் அட்லீக்கும் தளபதி விஜய்க்கும் இடையே ஆன உறவானது நட்பை தாண்டி சொந்தமாக மாறியுள்ளது.

தமிழில் தளபதி விஜய்க்கு பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த இயக்குனர் அட்லீ சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அட்லீ இயக்கத்தில் உருவாகும் முதல் ஹிந்தி திரைப்படம் இதுதான். இந்த திரைப்படத்தின் மூலம் நடிகை நயன்தாரா மற்றும் இசையமைப்பாளர் அனிருத்தை ஹிந்தியில் அறிமுகம் செய்து வைத்தார் இயக்குனர் அட்லீ. இந்த திரைப்படம் உலக அளவில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து மிகப் பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது.

ஷாருக்கான் வைத்து இந்த படத்தை அட்லி இயக்குவதற்கு முன்னதாக தளபதி விஜயை சந்தித்து இந்த படத்தின் கதையை கூறி விஜயின் சம்மதத்துடன் தான் பாலிவுட்டில் ஷாருக்கான் வைத்து படம் இயக்கியதாக இயக்குனர் அட்லீ பலமுறை கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போதும் தளபதி விஜய் பலமுறை இயக்குனர் அட்லீயை தொடர்பு கொண்டு படத்தின் நிலவரம் குறித்து கேட்டு கொண்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் இயக்குனர் அட்லீ , ஜவான் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் உடன் இணைந்து மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாக இருந்தது. மேலும் அந்த திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடித்தால் படம் 3000 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு அடுத்ததாக உலகநாயகன் கமலஹாசன் வைத்து ஒரு திரைப்படத்தை அட்லீ இயக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சு வார்த்தை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, தளபதி விஜய் உடன் நெருக்கமான நட்புறவில் இருக்கும் அட்லீ நடிகர் அஜித் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் அட்லீ இடம் தளபதி விஜய்க்கு அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தது போல அஜித் அவர்களுடன் இணைந்து படம் இயக்க வாய்ப்புள்ளதா என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அட்லீ, நடிகர் அஜித்திற்காக தன்னிடம் ஒரு பயங்கரமான ஸ்கிரிப்ட் உள்ளது என்றும் அதற்கு அஜித் சம்மதிக்கும் பட்சத்தில் இந்த படம் உருவாக அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.

விஜய் ஹீரோ அவதாரம் எடுக்க நடிகர் பிரசாந்த் ஒரு முக்கிய காரணமா?

மேலும் நடிகர் அஜித் அவர்களை முதலில் சந்தித்த அனுபவம் பற்றியும் பகிர்ந்துள்ளார். ஆரம்பம் படப்பிடிப்பின் போது நயன்தாராவை சந்திக்க சென்ற நேரத்தில் தான் இயக்குனர் அட்லீ தல அஜித் அவர்களை சந்தித்துள்ளார். ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பும், ராஜா ராணி படத்தின் படப்பிடிக்கும் ஒரே நேரத்தில் நடந்தது. இரண்டு படத்திலும் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்து வந்த நிலையில் நயன்தாராவை சந்திக்க சென்ற நேரத்தில் தல அஜித்தை சந்தித்ததாக அட்லீ கூறினார்.

அந்த நேரத்தில் அஜித், அட்லீயை பார்த்து இப்பொழுதுதான் பள்ளி படிப்பை முடிச்சீங்களா.. என விளையாட்டாக கேலி செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய துயரமான தருணங்களில் நடிகர் அஜித் தனக்கு பல ஆறுதல்களை கொடுத்ததாகவும், இதுகுறித்து தான் சமூக வலைத்தளங்களில் இதுவரை கூறவில்லை என்றும் தற்பொழுது தான் முதல் முறை கூறியுள்ளதாக அட்லி தெரிவித்துள்ளார். அந்த வகையில் தல அஜித் அவர்களை வைத்து படம் இயக்குவது என்பது தனக்கும் மிகப் பிடித்தமான விஷயம்தான் விரைவில் இது குறித்த அப்டேட்கள் வர வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews