அர்ச்சனை பொருட்களுக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா?

நான் அர்ச்சனை செய்ய பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தமிருக்கிறது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.


தேங்காய்:

தேங்காய் ஓடு மிகவும் கடினமாகவும், வலுவாகவும் இருக்கும். அதை உடைத்தால் சுவையான தண்ணீர் மற்றும் உள்ளே வெண்மையாக இருக்கும். அதுபோல தேங்காய் ஓடு போல தேவையில்லாத கோபம், அகம்பாவம் உடைய வேண்டும். தேங்காய் உள்ள இருக்கின்ற வெண்மை நமது தூய மனதாக இருக்க வேண்டும். அதில் வரும் தண்ணீர் போன்று நமது சிந்தனை, எண்ணங்கள் இருக்க வேண்டும் என்பதை குறிக்கின்றது.

திருநீறு(விபூதி):

விபூதியின் மறுபெயர் சாம்பல் ஆகும். நமது உடலும் ஒரு நாள் சாம்பல் ஆகிவிடும். ஆதலால் நம் மனதில் தோன்றும் சுயநலம், பொறாமை, அகம்பாவமும் எல்லாம் இருக்க கூடாது என்பதை உணர்த்துவதற்கு இதனை நெற்றிலும், உடலிலும் பூசிக் கொள்கிறோம்.

வாழைப்பழம்:

வாழைப்பழம் மறுபிறவி எடுக்க கூடாது என்பதை உணர்த்துகிறது. வாழைப்பழம் நடுவே விதை கருப்பு நிறத்தில்  சிறியதாக இருக்கும். பெரும்பாலும் விதையில் வாழைப்பழம் முளைப்பது என்பது அரிதாகும். அதுபோல நாமும் இந்த பிறவியில் முக்தி பெற இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் மறுபிறவி எடுக்காமல் இருப்பதற்கு பாவங்கள், தேவையில்லாத கோபம், ஆணவம், தான் என்ற அகம்பாவம் இருக்க கூடாது.

Published by
Staff

Recent Posts