கும்பம் வைத்தலின் ரகசியம்

திருமணம், கிரகப்பிரவேஷம், கும்பாபிஷேகம், கணபதி ஹோமம் மாதிரியான சுபநிகழ்ச்சிகளில் கும்பம் வைப்பதை பார்த்திருப்போம். அப்படி கும்பம் வைப்பது இறைவனையே அங்கு முன்னிறுத்துவதாய் அர்த்தம். கும்பத்தின் ஒவ்வொரு பாகமும் உடல் பாகத்தை குறிப்பதாகும்.

கும்பத்தின் மேல் சுற்றப்பட்ட துண்டு——- உடம்பின் தோல்

கும்பத்தை சுற்றியுள்ள நூல்———————— நாடி நரம்புகள்

கும்பம் எனப்படும் குடம் —————————— தசை

கும்பத்தினுள் இருக்கும் தண்ணீர் ————————– இரத்தம்

கும்பத்தினுள் இடப்படும் நவரத்தனங்கள் —————— எலும்பு

கும்பத்தின் மேல் வைக்கப்படும் தேங்காய் ————————- தலை

கும்பத்தின்மேல் வைக்கப்படும் மாவிலை ——————– தலைமயிர்

கும்பத்தின்மேல் வைக்கும் தர்ப்பை ————————- குடுமி

கும்பத்தின் எதிரில் சொல்லும் மந்திரம் ————————– உயிர் என அனைத்தும் நமது உடல்பாகங்களை குறிக்கின்றது.

உலகம் உருவானது நீரிலிருந்துதான். மீண்டும் உலகம் நீரிலேயே முடிவுக்கு வர இருக்கின்றது. ஆகையால் ஆதிகர்த்தாவாகிய இறைவன் நீரின்மூலம் உருவ வழிபாட்டுக்குக் கொண்டுவருவதே இந்த கும்பத்தின் அர்த்தம்.

Published by
Staff

Recent Posts