பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பதால் என்னென்ன நன்மைகள்

பசுவை விலங்குகளில் நாம் தெய்வீகமாக கருதுகிறோம். மஹாலட்சுமியின் அம்சமாக பசுவை கருதுகிறோம் பல கோவில்களுக்கு முன்னால் பசு மாடு நிற்கும் அதற்கு அகத்திக்கீரை வாங்கி கொடுக்க பெரியவர்கள் சொல்வார்கள். பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பதால் உண்டாகும் நன்மைகள் என்ன என்ன என்று பார்ப்போம்.

28681acd351ff06eb3fe2cab45209681

முதலில் அனைத்து சுபகாரியங்களும் நடக்கும், பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஈடான அனைத்து தோஷங்களும் விலகும்.

வம்சாவழியாக ஏற்பட்டிருக்கும் பித்ரு தோஷங்கள் அனைத்தும் விலகும்.

அகத்திக்கீரை கட்டை தொடர்ந்து பசுமாட்டுக்கு கொடுப்பதால் 16 ஜென்ம பாவங்கள் கூட நீங்கும்.

பசுவுக்கு புல் கொடுப்பதாலும் கழுத்துப்பகுதியில் சொறிந்து விடுவதாலும் கொடிய பாவங்கள் அகலுமாம். இதை முன்னிட்டே நமது முன்னோர்கள் ஆவுரஞ்சுக்கல் அமைத்தனராம்.

பசு அருகில் அமர்ந்து செய்யும் தவம் பூஜைக்கு அதிக வலிமை உண்டாம்.

பசுவின் அம்மா என்று அடிக்கடி கத்தும் ஓசையே அந்தப்பகுதிக்கு நல்ல மங்கள ஓசையை கொடுக்குமாம்.

பூலோகத்தில் பசு தானம் செய்வது கடுமையான முன்னேற்றங்களை நமக்கு தருவதோடு மேலோகத்தில் நமக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளையும் நீக்குமாம்.

பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் காலம் சந்தியா காலம் கோதூளி காலம் என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும் . இந்த நேரம் நல்ல நேரம் ஆகும்.

இப்போதுள்ள காலங்களில் பசுமாடு கன்று போடும் தருவாயில் அதற்கு சீமந்தம் எனும் வளைகாப்பு கூட செய்கிறார்கள் இது மிகப்பெரிய புண்ணியங்களை நன்மைகளை அவர்களின் வாரிசுகளுக்கு பெற்றுத்தரும்.

பசுவிற்கு நாம் செய்யும் உதவிகளை அன்றாட பணிகளில் ஒன்றாக கருதி செய்ய வேண்டும். நடைமுறை வாழ்வில் இதை செய்ய சாத்தியமில்லை என்று சொல்லக்கூடாது. ஏனென்றால் நடைமுறை வாழ்வில் நாம் செய்யும் காரியங்களாக பொழுது போக்கு சார்ந்த விசயங்களுக்கு நேரம் ஒதுக்குகிறோம் அது தவறென்று சொல்லவில்லை. அது போல பசுமாட்டுக்கு அகத்திக்கீரை கொடுப்பது, வாழைப்பழம், புல் இரைகள் கொடுப்பது தினம் தோறும் அதை தொடர்ந்து செய்வதும் நல்லதொரு சிறப்பான வாழ்க்கையை தரும்.

ஒரு நாள் கொடுத்து விட்டு எனக்கு எதுவும் நடக்கலை என்ற புலம்பலால் பிரயோஜனம் இல்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews