திருமணம் தள்ளிப்போகிறதா திருப்பரங்குன்றம் முருகனை மலை வலம் வாருங்கள்

நாளை கார்த்திகை மகா தீப பெருவிழா நடக்கிறது. எல்லா ஆலயங்களிலும் தீபம் ஏற்றும் விழா நடக்கிறது. தீப திருவிழா நடக்கும் கோவில்களில் குறிப்பிடத்தக்க கோவில் திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக திருப்பரங்குன்றம் முருகன் கோவில்.

755bff8931a3b2b49fe369745af394ae-1

முருகன் தவம் இருந்த இடம் திருப்பரங்குன்றம் தவம் கண்டு மகிழ்ந்த சிவன் பார்வதி தேவி இருவரும் முருகனுக்கு இங்கு காட்சி கொடுத்தனர். அதன் அடிப்படையில் இங்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும் உள்ளது.

மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்கி இந்த முருகனை வணங்க செல்வது இன்னும் சிறப்பை தரும்.

சூரபத்மனால் அவதியடைந்தார்கள் தேவர்கள். சூரபத்மனை முருகப்பெருமான் அழித்ததால் மனம் மகிழ்ந்த தேவர்கள் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் -தெய்வானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

முருகனுக்கு உகந்த கார்த்திகை நட்சத்திரமான நாளை மனப்பூர்வமாக திருப்பரங்குன்றம் முருகனை வழிபட்டு மலைவலம் வந்து பாருங்கள் வாழ்வில் மாற்றங்கள் நடக்கும் தடைபட்ட திருமண காரியங்கள் அனைத்தும் முருகப்பெருமான் அருளால் சீக்கிரம் நடக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews