விமான விபத்தில் Amazon காட்டுக்குள் சிக்கிய குழந்தைகள்- 40 நாட்களுக்கு பின் நடத்த மேஜிக்!

மே 1 ஆம் தேதி பிரேசிலில் இருந்து  சிறிய ரக விமான மூலம் 7 பேர் தெற்கு கொலம்பியாவுக்கு புறப்பட்டு உள்ளனர். அந்த விமானம் அமேசான் காடுகளுக்கு மேல் சென்று கொண்டிருந்தபோது விமானத்தின் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு விபத்துக்குள்ளானது. அந்த பணத்தில் விபத்துக்குள்ளான விமானத்தை 100 ராணுவ வீரர்கள் கொண்ட குழுவினர் கண்டுபிடித்தனர்.

அதன் அருகே விமானி துணை விமானி மற்றும் 33 வயது பெண்ணின் சடலும் காயத்துடன் இருந்துள்ளது. மெட்ரோலினா என்ற அந்த பெண் தனது நான்கு குழந்தைகளுடன் விமானத்தில் சென்று உள்ளார். விபத்து நடந்த இடத்தில் குழந்தைகள் இல்லாததால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது .

13 வயது, 9 வயது, 4 வயது மற்றும் 11 மாத குழந்தை என நான்கு பேரும் உயிருடன் இருக்கிறார்களா என்பதே தெரியாததால் இந்த சம்பவம் கொலம்பியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே குழந்தைகள் உயிருடன் இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்ட அந்நாட்டு அதிபர் அடுத்த நாளே அந்த பதிவை நீக்கினார்.

குழந்தைகளின் நிலை குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார். இதனால் மீண்டும் சோகம் சூழ்ந்தது. வனப்பகுதியில் பாதி சாப்பிட்ட நிலையில் கிடந்த பழங்கள் குச்சிகள் இலைகளை கொண்டு தற்காலிகமாக அமைக்கப்பட்ட தங்கும் இடம் ஆடைகள் உள்ளிட்டவை கிடந்ததால் குழந்தைகள் அங்கு இருக்கக்கூடும் ராணுவத்தினர் கூறினர்.

இதற்கிடையில் குழந்தைகளின் கால் தடம் இருப்பதாகவும் புகைப்படங்கள் வெளியாகின. தொடர்ந்து அவர்களை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் சூரிய ஒளி கூட முழுமையாக செல்ல முடியாத காட்டுப்பகுதியில் சுற்றி தெரியும் குழந்தைகளின் நிலையை அறிய அனைவரும் காத்திருந்தனர்.

இந்த உணவுகள் சாப்பிட்டா நஞ்சாக மாறுமா? அந்த 7 உணவுகள் என்னென்ன தெரியுமா….

அவர்களுக்கு நிம்மதியை கொடுக்கும் வகையில் நான்கு பேரையும் ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் வாசிகள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். நான்கு குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட செய்தி கேட்டு அவர்களின் தாத்தா பாட்டிகள் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

40 நாட்கள் அரசும் உள்ளூர் மக்களும் குழந்தைகளை மீட்க எடுத்த நடவடிக்கைகள் பாராட்டப்பட்டு வருகிறது. மற்றொரு பக்கம் அந்த குழந்தைகள் மனம் தளராத உயிருடன் இருக்க சாதுரியமாக நடந்து கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews