தொட்டு கூட பார்க்க முடியாத இடத்தில் சிஎஸ்கே, ஹைதராபாத்.. இந்த சீசனோட தரமான சம்பவம் இதான்..

நடப்பு ஐபிஎல் தொடரில் ஏறக்குறைய தொடரின் முதல் பாதி முடிவடைந்து விட்டது என்று சொல்லலாம். ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் 7 போட்டிகள் ஆடி முடித்துள்ள நிலையில், மற்ற அனைத்து அணிகளும் 6 போட்டிகள் ஆடி முடித்துள்ளது. இதன் அடிப்படையில் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் அணி முதல் இடத்திலும், கொல்கத்தா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

மேலும் 7 போட்டிகள் ஆடி ஒன்றில் மட்டும் வெற்றி கண்டுள்ள பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலும் உள்ளது. அடுத்த பாதியில் நிச்சயம் மாற்றம் ஏற்படலாம் என்றும் அப்போது கடைசியில் இருக்கும் அணி கூட தொடர்ச்சியாக வெற்றி பெற்று முன்னேற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இன்று தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இதுவரை செய்துள்ள ஒரு அசத்தலான சம்பவத்தை பற்றி தற்போது பார்க்கலாம்.

சமீபத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி இருந்த போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று இருந்தது. இதற்கு முன்பாக கொல்கத்தா அணி தங்களின் சொந்த மைதானத்தில் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறும் சூழலில் இருந்த போதிலும் கடைசி கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை ஆடிய ராஜஸ்தான் வீரர் பட்லர் போட்டியின் விதியை மாற்றி எழுதி இருந்தார்.

இதனால் தங்களின் சொந்த மைதானத்தில் நடப்பு தொடரில் முதல் தோல்வியை கொல்கத்தா அணி பதிவு செய்துள்ளது. அப்படி இருக்கையில் தான் சென்னை மற்றும் ஹைதராபாத் அணியின் ஒரு அசத்தலான விஷயமும் அரங்கேறி உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களின் சொந்த மைதானத்தில் இதுவரை மூன்று போட்டிகள் ஆடி உள்ளது. இந்த மூன்றிலும் முறையே மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளை வீழ்த்தியுள்ளது.

அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களுரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆடியிருந்த நிலையில் மூன்றிலும் அவர்கள் வெற்றி கண்டுள்ளனர். இதனால் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளை தவிர மற்ற அனைத்து அணிகளுமே இந்த தொடரில் தங்களின் சொந்த மைதானத்தில் தோல்வியடைந்து விட்டனர்.

அப்படி இருக்கையில், இந்த இரண்டு அணிகளையும் சொந்த மைதானத்தில் அசைக்க முடியாமல் இருப்பது தான் இதில் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும் இனி வரும் போட்டிகளில் அவர்கள் தோல்வி அடைவார்களா அல்லது தொடர்ச்சியாக வெற்றியை நோக்கி பயணிப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...