இவரது குரலுக்கு இன்றும் மதிப்பு உண்டு.. விஎஸ் ராகவன் பற்றி அறியப்படாத பக்கங்கள்..!!

தமிழ் திரை உலகில் நூற்றுக்கணக்கான குணசத்திர நடிகர்கள் இருந்தாலும் அவர்களில் ஒரு சிலர் மட்டும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பார்கள். அவர்களில் ஒருவர் தான் நடிகர் விஎஸ் ராகவன். அவருக்கு மிகப்பெரிய பிளஸ் அவரது குரல் தான். அவரது குரலில் பேசுவதற்கு இன்றும் மிமிக்ரி கலைஞர்கள் ஆர்வமாக இருப்பார்கள். அந்த அளவுக்கு அவரது குரல் தனித்தன்மை வாய்ந்தது.

ஏற்ற இறக்கத்துடன், ஒருவித வித்தியாசமாக அவர் பேசுவது சினிமாவில் மட்டும் இன்றி நாடகத்திலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. நடிகர் விஎஸ் ராகவன் கடந்த 1925 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தின் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். அவர் சிறு வயதிலேயே சென்னை மயிலாப்பூருக்கு பெற்றோருடன் குடிவந்தார்.

இந்த நிலையில் தான் அவருக்கு ஒரு முன்னணி இதழில் உதவி எடிட்டர் வேலை கிடைத்தது. ஊடகத்தில் வேலை பார்த்துக் கொண்டே அவர் மேடை நாடகத்திலும் நடித்து வந்தார். தமிழ் மட்டும் இன்றி ஹிந்தி நாடகத்திலும் நடித்தார். அதன் பின்னர் அவர் பல நாடகங்களில் நடிக்க தொடங்கிய நிலையில் கே.பாலச்சந்தர் நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

எம்.எஸ்.விஸ்வநாதன் இத்தனை படங்களில் நடித்துள்ளாரா? முதல் படமே அஜித்துடன்..!

images 12

இந்த நிலையில் தான் அவருக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, அஜித், கார்த்தி என 4 தலைமுறை நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார்.

முதல் முதலாக அவர் 1954 ஆம் ஆண்டு வெளியான வைர மாலை என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஆர்எஸ் மனோகர் முக்கிய வேடத்தில் நடித்த நிலையில் விஎஸ் ராகவன் அவர்களுக்கும் நல்ல கேரக்டர் கிடைத்தது. முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

அதன் பிறகு அவர் சமையா சஞ்சீவி என்ற படத்தில் நடித்ததோடு அந்த படத்தை இயக்கவும் செய்தார். முதன் முதலாக இயக்கிய இந்த திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. ஆனாலும் அதன் பிறகு அவர் நடிப்பதில் தொடர்ந்து பிசியானதால் அடுத்தடுத்த படங்களை இயக்கவில்லை.

முன்னணி நடிகர்கள் இணைந்த ஒரே படம்….. ஹிட் அடிக்காமல் போனதே…..!!

images 13

காத்திருந்த கண்கள், நெஞ்சில் ஓர் ஆலயம், வானம்பாடி, பொம்மை, கர்ணன், ராமு, பேசும் தெய்வம், நெஞ்சிருக்கும் வரை என எம்.ஜி.ஆர் சிவாஜி ஆகிய இரு பிரபலங்களின் படங்களில் மாறி மாறி குணச்சித்திர வேடங்களில் நடித்தார். பெரும்பாலும் அவர் நாயகனின் தந்தை அல்லது நாயகியின் தந்தை கேரக்டரில் நடிப்பார். அவரது நடிப்பிற்கு எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருவருமே ரசிகர்கள் என்றும் கூறப்படுவது உண்டு.

இதன் பிறகு அடுத்த தலைமுறைகளான கமல்ஹாசன், ரஜினி ஆகிய இருவரது படங்களிலும் மாறி மாறி நடித்தார். குறிப்பாக ரஜினிகாந்தின் தம்பிக்கு எந்த ஊரு, கை கொடுக்கும் கை, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதேபோல் கமல்ஹாசனுடன் ஹே ராம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார்.

 

அதன் பிறகு நடிகர் விஎஸ் ராகவன் அடுத்த தலைமுறை நடிகர்களான அஜித் உள்பட பல பிரபலங்களின் படங்களிலும் நடித்தார். அஜீத் நடித்த பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தில் ஜோதிகாவின் தாத்தாவாக நடித்திருந்தார். இந்த தலைமுறையில் விஎஸ் ராகவன் அவர்களை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் என்றால் அவர் இயக்குனர் சுந்தர் சி தான். கலகலப்பு திரைப்படத்தில் அவர் ஓவியாவின் தாத்தாவாக நடித்திருப்பார். அந்த படத்தில் செம காமெடி பண்ணி இருப்பார்.

images 14

அதேபோல் வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்ற திரைப்படத்தில் அரண்மனை ஜோதிடராக நடித்து அசத்திருப்பார். இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், கொலை கொலையா முந்திரிக்கா, தமிழ் படம், கார்த்தியின் சகுனி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதேபோல் விஜய் சேதுபதியின் இதற்கு தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா விஷ்ணு விஷால் நடித்த இன்று நேற்று நாளை உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார். குறிப்பாக மாளவிகா நடித்த அன்னை சீரியல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதன் பிறகு பெண், ரேகா ஐபிஎஸ், பைரவி, வள்ளி உள்ளிட்ட சீரியல்களிலும் தாத்தா கேரக்டரில் நடித்தார்.

கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர். எம்ஜிஆர் சிவாஜி காலத்து முதல் இப்போதைய கார்த்தி விஜய் சேதுபதி படங்கள் வரை அவர் நடித்துள்ளார்.

ரஜினி, கமல் பீல்டில் இருந்த போது அவுட்டாகாத நடிகர் சிவகுமார்… அப்புறம் பீல்டு அவுட்…. என்ன காரணம்னு தெரியுமா?

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு வித்தியாசமான குணச்சித்திர வேடங்களில் நடித்த விஎஸ் ராகவன், தமிழ் சினிமா இருக்கும் வரை ரசிகர்கள் மனதில் இருப்பார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...