தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய அதிதீவிரப்புயல் பிபர்ஜாய் சற்று வலு குறைந்து குஜராத் துறைமுகத்தின் தென்மேற்கில் நிலை கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மேலும் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து 15 ஆம் தேதி மிக தீவிர புயலாக மாறி கரையை கடக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசைக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஜூன் 17ஆம் நாள் வரை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் என்ற நிலையிலும், ஒரு சில இடங்களில் இயல்பு நிலையிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகவும் இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஓட்டுநர் இல்லாத டாக்ஸி சேவை இந்தியாவில் வருகிறதா?..

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Velmurugan

Recent Posts