ரோட்டுக்கடை சுவையில் காலிஃப்ளவர் ஃப்ரை வீட்டில் எப்படி செய்யணும் தெரியுமா?

மாலை நேரங்களில் ரோட்டுக்கடைகளில் போடப்படும் காலிஃப்ளவர் ஃப்ரை நாம் சாப்பிட்டிருப்போம், அந்த சுவையில் வீட்டிலே காலிஃப்ளவர் ஃப்ரை எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

காலிஃப்ளவர் – ஒரு கப் ,
சோள மாவு – 3/4 கப்,
கடலைமாவு – 1/4 கப்,
மிளகாய் தூள் – அரை டீஸ்புன் ,
தனியா தூள் – அரை டீஸ்புன்,
கரம் மசாலா தூள் – கால் டீஸ்புன்,
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்புன்,
உப்பு – தேவைக்கு ஏற்ப ,
எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

அரை கப் ரவா இருக்கா? ஈவினிங் ஸ்நாக்ஸ் 5 நிமிடத்தில் ரவா கட்லெட் ரெடி!

செய்முறை

முதலில் காலிஃப்ளவரை சுத்தம் செய்து போடி துண்டுகளாக நறுக்கி உப்பு போட்டு நீரில் சிறிது நேரம் கொதிக்க விடவும். பிறகு நீரை வடிகட்டி காலிஃப்ளவரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு  சோயா மாவு, கடலைமாவு, உப்பு, மிளகாய்தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து  பிசைந்து கொள்ளவும். அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொண்டால் அஜீரண கோளாறுகளை தவிர்க்க முடியும்.

அதனுடன் காலிபிளவரை கலந்து கொள்ளவும் , தேவைக்கு ஏற்ப உப்பு ,காரம் சேர்த்து கொள்ளவும்.

பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி கலந்து வைத்துள்ள காலிஃப்ளவரைப் போட்டு சிவக்க பொறித்து எடுக்கவும்.க்ரிஸ்பான காலிஃப்ளவர் ஃப்ரை ரெடி. மிக சுலபமாக செய்து விடலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews