வாரம் 2 சர்வே எடுக்கப்படுகிறது.. ஒன்று சென்னையில் இருந்து.. இன்னொன்று டெல்லியில் இருந்து.. இரண்டிலும் விஜய் ஜெயிப்பார் என்று தான் வருகிறது.. ஆனால் ஒரு சர்வேயும் வெளியே வரவில்லை.. முக்கிய அரசியல் பிரபலங்களுக்கு இப்போதே தெரிந்து விட்டது.. இந்த முறை விஜய் ஆட்சி தான் என்று.. மக்கள் எழுச்சி முன் அரசியல்வாதிகளின் தந்திரம் ஒருபோதும் பலிக்காது.. இந்திரா காந்தியும் தோற்றார், ஜெயலலிதாவின் தோற்றார்.. ஜனநாயகத்தில் மக்கள் தான் மன்னர்கள்..பிப்ரவரி 13, 2026, 07:27
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய் ரசிகன் இருப்பது உண்மைதான்.. ஆனால் அதில் பாதி பேருக்கு ஓட்டு இல்லையே.. ரஜினி, அஜித், சூர்யா, கார்த்தி, ரசிகர்கள் எப்படி விஜய்க்கு ஓட்டு போடுவார்கள்? ஆன்லைனில் தேர்தல் வைத்தால் தான் விஜய் ஆட்சியை பிடிக்க முடியும்.. கேலி, கிண்டல் செய்யும் விஜய் எதிர்ப்பாளர்கள்.. விஜய் இதற்கும் பதில் சொல்ல மாட்டார்.. அவரது பதில் தேர்தல் முடிந்தபின்னர் தெளிவாக வரும்..!பிப்ரவரி 12, 2026, 20:55
திமுக 85 தொகுதிகள்.. அதிமுக 70 தொகுதிகள்.. தவெக 60 தொகுதிகள்.. மீதி இழுபறி.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்.. யாருக்கும் மெஜாரிட்டி இல்லையா? தொங்கு சட்டசபை அமைந்தால் அதிமுக + தவெக கூட்டணி ஆட்சி அமையுமா? விஜய் ஒப்புக்கொள்வாரா? அமித்ஷா ஒப்புக்கொள்ள வைப்பாரா? தேர்தலுக்கு பின் ஒரு ஆடு புலி ஆட்டம் இருக்குது..!பிப்ரவரி 12, 2026, 17:19
பரம்பரை பரம்பரையா நமக்கு ஓட்டு போட்டவங்க மாற மாட்டாங்கன்னு அதிமுகவும் திமுகவும் நினைக்குது.. ஆனால் பிரச்சாரம் பண்ணுறது அடுத்த தலைமுறை இளைஞர்கள்.. ஒரு இளைஞர் குறைந்தபட்சம் அவங்க அப்பா, அம்மா மனசை மாத்திட்டாலே விஜய்க்கு 40% ஓட்டு உறுதி.. 2026 தேர்தலில் ஏதோ மாயாஜாலம் நடக்கப்போவது மட்டும் உறுதி..!பிப்ரவரி 12, 2026, 11:20
விஜய்யை அரசியல் கட்சி தலைவர்களும், அரசியல் விமர்சகர்களும் குறைத்து மதிப்பிடுகிறார்கள்.. அவருடைய உண்மையான பலம் யாருக்கும் தெரியவில்லை.. 50 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள கட்சிகளே களத்தில் பரபரப்பாக இருக்கும்போதும், விஜய் மட்டும் அமைதியாக இருக்கிறார் என்றால் அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது.. விஜய் வாங்கும் வாக்கு சதவீதம் இதுவரை எந்தவொரு தனியொரு கட்சியும் வாங்காத அளவு இருக்கும்.. ரிசல்ட் வரும்போது எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி இருக்கும்..!பிப்ரவரி 12, 2026, 07:12
விசில் அடிக்கிறது வெறும் சத்தம் இல்ல… அது ஊழலுக்கு எதிரான எச்சரிக்கை சத்தம்! இந்த விசில் சத்தம் கோட்டை வரைக்கும் எதிரொலிக்கும்! இது வெறும் ஆரம்பம் இல்ல, தம்பி… தமிழ்நாட்டோட அடுத்த அத்தியாயம்! ஸ்கிரீன்ல பார்த்தது ‘தளபதி’… இப்போ களத்துல பார்க்கப்போறது ‘தலைவன்’! அவங்க 50 வருஷத்து வீடியோவை உருட்டிக்கிட்டு இருக்கட்டும்… நாம 50 வருஷத்துக்கான மாற்றத்தை உருவாக்கப் போறோம்! தவெகவினர் ராக்ஸ்..!பிப்ரவரி 11, 2026, 19:20
தமிழகம் முழுவதும் பரவலாக தவெகவுக்கு 20% வாக்குகள்.. சென்னை, மதுரை, கோவை போன்ற நகர்ப்புறங்களில் 30%.. தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் 10% கூடலாம்.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு.. தேர்தல் முடிவு இதுதான்.. ஒன்று தவெக ஆட்சி.. இல்லையேல் தொங்கு சட்டமன்றம், மறு தேர்தல்..!பிப்ரவரி 11, 2026, 13:45
அதிமுக, திமுக ரெண்டு பேருக்குமே இப்போ முதல் எதிரி விஜய் தான்.. தேர்தல் நேரத்தில் ரெண்டு பேரும் சேர்ந்து அடிப்பாங்க.. வேட்புமனு தாக்கல் செய்வதில் இருந்து தேர்தல் நாளில் நடக்கும் சம்பவங்கள் வரை தவெகவில் சமாளிக்க ஆளில்லை.. இதையும் மீறி விஜய் ஜெயிச்சாருன்னா அது உலக அதிசயம் தான்.. அரசியல் விமர்சகர்கள்..பிப்ரவரி 11, 2026, 11:30
சர்வதேச நிறுவனம் எடுத்த ரகசிய கருத்துக்கணிப்பு.. திமுக 33% , தவெக 30% , அதிமுக 28%.. இது திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தால் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு.. தவெக பக்கம் காங்கிரஸ் வந்தால்.. தவெக 42%, திமுக 28% அதிமுக 25%.. காங்கிரஸ் கையில் தான் இருக்கிறது முடிவு.. காங்கிரஸ் கட்சியின் 3% முக்கியமல்ல.. காங்கிரஸ் வெளியேறினால் விசிக வெளியேறும்.. காங்கிரஸ், விசிக இருக்கும் கூட்டணிக்கு தான் சிறுபான்மையர் ஓட்டு கிடைக்கும்..பிப்ரவரி 11, 2026, 07:59
75 வருஷம் ஆனாலும், 2 வருஷம் ஆனாலும்… மக்கள் மனசுல யாரு இருக்காங்களோ அவங்கதான் ராஜா! சின்னம் முக்கியம் இல்ல, எண்ணம் தான் முக்கியம்! நாங்க யாரையும் அடிக்க வரல… ஆனா யாரையும் எங்களை அடக்க விடமாட்டோம்! இது விஜய்யோட அரசியல்… இங்க ‘ஆக்சன்’ குறைவா இருக்கும், ஆனா ‘இம்பாக்ட்’ அதிகமா இருக்கும்! குறை சொல்றவங்க சொல்லிட்டே இருக்கட்டும்… ஆனா மக்கள் கொடுக்கப்போற தீர்ப்பு, நீங்க எதிர்பார்க்காத ‘கிளைமாக்ஸ்’ஸா இருக்கும்!பிப்ரவரி 10, 2026, 19:00