மக்களால் ஒதுக்கப்பட்ட ஒரு கட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஆளவிடாமல் குடைச்சல் கொடுத்தால் மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.. இதைவிட பெரிய தண்டனையா கொடுப்பாங்க.. ஒரு 3 மாசம் ஆகட்டும் பார்ப்போம்ன்னு மக்களே பொறுமை காக்குறாங்க.. ஆனால் ஆட்சி அமைச்ச 25 நாளுக்குள்ள திமுக அல்லக்கைகள் துள்ளுது.. திமுகவுக்கு ஏழறையே இந்த ஜால்ரா போடுற கூட்டம் தான்.. இந்த கூட்டம் இருக்குற வரைக்கும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது…மே 28, 2026, 11:41
வாழ்க்கை ஒரு வட்டம்டா.. 2014ல் மோடி தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும்போது விஜய்யை சந்தித்தார்.. அப்போது மோடி பிரதமரும் இல்லை.. விஜய் முதல்வரும் இல்லை.. இன்று மோடி பிரதமர்.. விஜய் முதல்வர்.. 2வது சந்திப்பில் இருவரும் உயர் பதவியில்.. இதைத்தான் வாழ்க்கை ஒரு வட்டம்ன்னு சொல்றாங்களா?மே 27, 2026, 11:59
10 அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவி விலகுவார்கள்.. திருச்சி கிழக்கை சேர்த்து மொத்தம் 11 தொகுதிக்கு இடைத்தேர்தல்.. 11லும் விசில் ஜெயித்துவிட்டால் 118 வந்துவிடும்.. இதுதான் விஜய்யின் திட்டமா? தூய அரசியல் என்பது மக்களுக்கு தான்.. அதிமுகவுக்கும் திமுகவுக்கும் எதிராக தூய அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை.. ரெண்டு கட்சியையும் அடிச்சு நொறுக்குங்க தளபதி.. தவெக தொண்டர்கள் ஆவேசம்…!மே 26, 2026, 11:40
தவெகவுக்கு மக்கள் 108 மட்டும் கொடுத்ததற்கு இப்படி ஒரு காரணம் இருக்குதா? மெஜாரிட்டி இல்லாததால் தான் திமுக கூட்டணி உடைந்து திமுக தனிமையில் இருக்கிறது… மெஜாரிட்டி இல்லாததால் அதிமுகவில் ஒரு பிரிவு ஏற்பட்டு 25 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவளித்தார்கள்.. 118 விஜய்க்கு மக்கள் கொடுத்திருந்தால் இரு கூட்டணியும் அப்படியே இருந்திருக்கும்.. ஆக மொத்தம் மக்கள் ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்திருக்கிறார்கள்.. விஜய் கையில் ஆட்சி.. திமுக கூட்டணி பணால்.. அதிமுக கூட்டணி பணால்.. இதுதாண்டா தமிழக மக்கள்…மே 25, 2026, 16:45
விஜய் ஜெயிக்க கூடாதுன்னு பெரும் முயற்சி எடுத்தது அதிமுக, திமுகவை விட ஆர்.எஸ்.எஸ்.தான்.. அந்த அமைப்புக்கே தண்ணி காட்டியவர் விஜய்.. விஜய் வெற்றி ஒரு யுக புரட்சி.. திராவிடமும் ஒழிந்தது.. மதவாத அரசியல், ஜாதி அரசியலும் ஒழிந்தது.. இனி புதிய தமிழ்நாட்டில் பழைய சுயநல கட்சிகளுக்கு வேலை இல்லை.. தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் விஜய்யும் அண்ணாமலையும் தான்.. மாறி மாறி இருவரும் ஆட்சி செய்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை…மே 25, 2026, 11:30
எம்ஜிஆரை அடுத்து சிவாஜிக்கு கூட்டம் கூடுச்சு, விஜயகாந்துக்கு கூட்டம் கூடுச்சு, கமல்ஹாசனுக்கு கூட்டம் கூடுச்சு, ஆனால் அந்த கூட்டம் ஓட்டா மாறலை.. அப்படித்தான் விஜய்யையும் நினைச்சு தப்புக்கணக்கு போட்டாங்க.. ஆனால் அதிசயமா விஜய்க்கு கூடுன கூட்டமெல்லாம் ஓட்டா மாறுச்சு.. அதுமட்டுமல்ல, அவங்க வீட்டுல உள்ள ஓட்டும் விசிலுக்கு மாற வச்சாங்க.. உலகம் முழுக்க பெற்றோர் சொல்வதை தான் பிள்ளைகள் கேட்பாங்க.. ஆனால் தமிழ்நாட்டுல மட்டும் தான் பிள்ளைகள் சொன்னதை பெற்றோர் கேட்டாங்க.. மாற்றம் எங்கேயிருந்து வந்துச்சுன்னு இப்ப புரியுதா?மே 24, 2026, 21:59
விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால் இன்று எடப்பாடியார் தான் முதலமைச்சர்.. அதில் எந்த சந்தேகமும் இல்லை.. மக்கள் திமுகவுக்கு அவ்வப்போது சான்ஸ் கொடுப்பார்கள்.. ஒரு கட்சி எந்த அளவு மோசமாக ஆட்சி செய்யும் என்பதை அறிவதற்கு.. அதன்பின் வெறுத்து போய் அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வருவார்கள்.. ஆனால் 2021-2026 தமிழ்நாட்டின் மிக மோசமான ஆட்சி.. இன்னொரு சான்ஸ் கிடைக்கும் என கனவில் கூட நினைக்க வேண்டாம்..மே 24, 2026, 13:50
முன்னாடி எல்லாம் ஒரு சீட்டு, ரெண்டு சீட்டுக்கு அறிவாலயம் முன்னாடி கையேந்தி நிக்க வச்சீங்க… இனிமேல் அந்த பருப்பு வேகாது தம்பி! விசிகவும், ஐயுஎம்எல்-உம் இப்போ தவெக அமைச்சரவையில கம்பீரமா உட்கார்ந்திருக்காங்க. 2031-ல உங்க பழைய ‘திராவிட பந்தா’ அட்ரஸ் இல்லாம போகப்போகுது! 2031-ல திமுகவும், அதிமுகவும் தனித்து விடப்பட்டு அரசியல் அனாதையா நிக்கப் போறது உறுதி!மே 23, 2026, 21:40
ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கிற காலம் முடிஞ்சு போச்சு… ஆளுநர் மாளிகை முதல் தொழிலதிபர்கள் சந்திப்பு வரை, இப்ப நடக்குறது எல்லாமே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ‘ரியல் ஆக்சன்’! விளம்பர கூச்சல்கள் இல்லாம, அமைதியா முதல்வர் விஜய் போடுற ஒவ்வொரு அடித்தளமும்… இந்த தமிழ்நாட்டை உலகமே வியந்து பாக்குற சொர்க்க பூமியா மாத்துறதுக்கான மாபெரும் பாய்ச்சல்! ஒவ்வொரு நாளும் என்ன செய்தோம், ஏது செய்தோம் என விளம்பரப்படுத்தும் அரசு இல்லை.. ஆனால் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகள் செய்யப்படுகின்றன..மே 23, 2026, 12:23
திமுக எதிர்க்கட்சியா வந்தவுடன் 5 வருஷமா ஒளிஞ்சிகிட்டு இருந்த சமூக ஆர்வலர்கள் பொங்கிகிட்டு வந்துருவாங்க.. பியூஷ் மனுஷ் தன்னுடைய வேலையை ஆரம்பிச்சிட்டாரு.. பாடகர் கோவன் இனி வீதி வீதியா பாட்டு பாட வந்துருவாரு.. 5 வருஷமா தூங்கிய உதயகுமார், திருமுருகன் காந்தி எல்லாம் இனி 24 மணி நேரம் டியூட்டி பார்ப்பாங்க..மே 22, 2026, 15:29