Category: செய்திகள்

vijay vs actors

விஜய் சிஎம் ஆன பின்னர் பல நடிகர்களுக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது.. தனுஷ் கிட்டத்தட்ட கால் வைத்துவிட்டார்.. சூர்யா எப்போது வேண்டுமானாலும் வந்துவிடுவார்.. ராகவா லாரன்ஸ் சரியான நேரத்திற்கு காத்திருக்கிறார்.. இன்னும் விஷால், சிவகார்த்திகேயன் என பட்டியல் நீளுது.. தமிழ்நாட்டை பொருத்தவரை ஒரே ஒரு எம்ஜிஆர் தான்.. ஒரே ஒரு விஜய் தான்.. இன்னொரு தடவை ஒரு நடிகர் சிஎம் ஆகனும்ன்னா அதுக்கு குறைஞ்சது 50 வருஷமாவது ஆகும்…

ஜூலை 14, 2026, 10:55
vijay eps stalin

தமிழக அரசியல் 50 ஆண்டுகளாக திமுக ஆதரவு, திமுக எதிர்ப்பு என இரண்டே நிலை தான்.. இதுவரை திமுகவுக்கு எதிரான வாக்குகள் அதிமுகவுக்கு சென்ற நிலையில் அதை புத்திசாலித்தனமாக விஜய் தன் பக்கம் திருப்பினார்.. எடப்பாடி சறுக்கியது இங்கே தான்.. உட்கட்சி பிரச்சனையில் அவர் திமுகவை எதிர்க்க மறந்துவிட்டார்.. அவரது சறுக்கல் விஜய்க்கு லாபம் ஆகிவிட்டது.. இனி களம் திமுக ஆதரவு, தவெக ஆதரவு என மாறிவிட்டது.. இதை இப்போதைக்கு யாராலும் மாற்ற முடியாது…

ஜூலை 14, 2026, 10:10
A raja

விஜய் அரசை ஆளவிட மாட்டோம் என்று ஒவ்வொரு நாளும் திமுக வேலை செய்கிறது.. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சனைகளை எழுப்புகிறது.. ஆ ராசா ஒரு படி கீழே இறங்கி முதல்வர் விஜய்யை ஆபாசமாகவும் ஒருமையாகவும் பேசுகிறார்.. திமுகவின் டி.என்.ஏ இதுதான்.. தங்களுக்கு பிடிக்காதவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பார்கள்.. நடவடிக்கை எடுத்தால் ஓடி ஒளிவார்கள்.. மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.. எல்லை மீறினால் அடுத்த தேர்தலில் ஒரு சீட் கூட ஜெயிக்க மாட்டார்கள்…

ஜூலை 14, 2026, 09:49
dmk admk

அதிமுக, திமுக ஒண்ணா சேரப்போறீங்களா? தாராளமா சேருங்க.. அப்ப ரெண்டு பேருக்கும் சேர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை ஆப்பு வைக்கும்.. எல்லா முன்னாள் அமைச்சர்களும் தயாரா இருங்க.. அரசியல் தெரியாத அரசியல்வாதின்னு விஜய்யை நினைச்சிங்களா? உங்களை விட ஆயிரம் மடங்கு அரசியல் அவருக்கு தெரியும்.. எங்க அடிச்சா எங்க வலிக்கும்ன்னு புரிஞ்சிகிட்டு தான் அரசியலுக்கு வந்திருக்காரு…

ஜூலை 14, 2026, 07:46
stalin eps alliance

7 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு 4 திமுகவுக்கு 3ன்னு நீங்களே பிரிச்சிகிட்டா போதுமா? ஓட்டு போடுவது கட்சிக்காரன் மட்டுமில்ல, நடுநிலை பொதுமக்களும் தான்.. இதுல ஜெயிச்சிட்டா உள்ளாட்சி, பாராளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணின்னு கணக்கு போடுறீங்களா? அரசியல் கணக்குல எத்தனை ஜீரோக்கள் சேர்ந்தாலும் 1ஐ ஜெயிக்கவே முடியாது..

ஜூலை 14, 2026, 07:30
vijay karur

7ல் ஒன்று கூட மிஸ் ஆக கூடாது.. மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவா? 107 உடன் 7ஐ சேர்த்தால், 114 ஆகிவிடும்.. அப்புறம் காங்கிரஸ் மட்டும் கைகொடுத்தால் நிம்மதியாக ஆட்சி நடத்தலாம்.. நானே 7 தொகுதிகளுக்கும் பிரச்சாரத்திற்கு வருகிறேன்.. 107ல் ஜெயிச்சது பெரிய விஷயமல்ல.. 7ல் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும்.. ஆவேசத்தில் முதல்வர் விஜய்…

ஜூலை 14, 2026, 07:07
High Court order against Chennai Police Commissioner Arun: Tamil Nadu government appeals in Supreme Court

போன ஆட்சியில அப்படி இப்படி இருந்தும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்.. அதை நீங்கள் பயன்படுத்திகல.. இப்ப மாற்றிவிட்டார் முதல்வர்.. இனிமேல் விஜிலென்ஸ் வேற லெவலில் தெறிக்க வைக்கும்.. தப்பு செஞ்ச எல்லாத்தையும் உள்ளே தள்ளும்.. விஜய் ஆட்சியில ஒரு தடவை தான் சான்ஸ்.. அதை மிஸ் பண்ணினா அவ்வளவு தான்…

ஜூலை 13, 2026, 18:59
tk prabhu raid

தமிழ்நாட்டை வெட்டி விற்க நினைக்கும் கனிம கொள்ளையர்களே… இனி உங்கள் ஆட்டம் இந்த அமைச்சர் பிரபு முன்னால் பலிக்காது! திமுக ஆட்சியில இஷ்டம் போல கொள்ளை அடிச்சிங்க.. நம்ம முதல்வர் விஜய் ஆட்சியில ஒரு துண்டு கூட வெட்ட முடியாது.. அமைச்சரை பதவியில் இருந்து தூக்க பிளான் போடுறீங்களா? போடுங்க இது ஒன்னும் தலையாட்டி பொம்மை முதல்வர் ஆட்சி இல்லை.. தலைநிமிர்ந்து ஆட்சி செய்யும் முதல்வரின் ஆட்சி…

ஜூலை 13, 2026, 18:41
thirumavalavan

தவெக ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்கிவிட்டு விசிக மீண்டும் திமுக கூட்டணிக்கு சென்றால் கட்சி காணாமல் போகும்.. ஏற்கனவே விசிகவின் 50% ஓட்டு விஜய் கட்சிக்கு போயிருச்சு.. இப்படி மாறி மாறி அணி மாறினால் மீதமுள்ள ஓட்டும் போயிரும்.. விஜய்யை முதல்வராக ஏற்று கொள்ள திருமாவால் முடியவிட்டால் தாராளமாக வெளியே போகலாம்.. விஜய் ஒன்னும் அவரை பிடித்து வைக்கவில்லை.. அடுத்தமுறை இந்த இரண்டு சீட்டும் வராது..

ஜூலை 13, 2026, 15:59
annamalai vijay dmk admk

வாழ்க்கை ஒரு வட்டம் தான்.. இங்க தோக்கறவன் ஜெயிப்பான், தோக்குறவன் ஜெயிப்பான்.. ஆனால் விஜய் ஒரு மாஸ் புள்ளி.. அது எத்தனை வருஷம் ஆனாலும் மறையாது.. தவெகவை எதிர்த்து அரசியல் செய்வது தற்கொலை அரசியல்.. அந்த தவறை மிக சரியாக திமுகவும், அதிமுகவும் செய்து வருகிறது.. விசிக, இடதுசாரிகள், முஸ்லீம் லீக் கட்சிகள் சுதாரித்து கொண்டு அணிமாறிவிட்டன.. அண்ணாமலையும் சில வருடங்களுக்கு தவெக எதிர்ப்பு அரசியல் செய்ய மாட்டார்.. தனக்கான ஆதரவாளர்களை தேடுவாரே தவிர, விஜய் மீது விமர்சனம் வைத்தால் கதம் கதம் என்பதை புரிந்து கொண்டுள்ளார்.. அதனால் தான் நேற்று விஜய்யை அவர் விமர்சிக்கவில்லை.. முதல் அடியையே புத்திசாலித்தனமாக எடுத்து வைக்கிறார் அண்ணாமலை..

ஜூலை 13, 2026, 15:34