திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்தால்.. 40 சீட் வாங்கினாலும் 5க்கு மேல் ஜெயிக்க முடியாது.. தவெகவில் 50 வாங்கினால் 30ல் வெற்றி நிச்சயம்.. துணை முதல்வர் பதவியும், அமைச்சர் பதவிகளும் கிடைக்கும்.. கட்சியை வளர்த்து அதிகாரத்தில் பங்கு வேண்டுமா? 5ல் வெற்றி பெற்று தொடர்ந்து கொத்தடிமையா இருக்க வேண்டுமா? காங்கிரஸ் கட்சியே முடிவு செய்து கொள்ளட்டும்.. தவெகவின் கடைசி ஆஃபர்..பிப்ரவரி 12, 2026, 07:25
காங்கிரஸ் கட்சியின் பவர் அந்த கட்சிக்கே தெரியல.. 2006 முதல் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கு என்ன கிடைத்தது? 20 வருடங்களை வேஸ்ட் செய்த காங்கிரஸ்.. இனிமேலாவது சுதாரித்தால் தான் அடுத்த 10 ஆண்டுகளில் கட்சி வளரும்.. 2026ல் தவெகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே கரை சேர முடியும்.. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி யோசிப்பார்களா?பிப்ரவரி 12, 2026, 07:02
எந்த கடையில விலை அதிகமோ அங்கதான் வியாபாரம் நடக்கும்னா, அதுக்கு பேரு கட்சி இல்ல… அது ஒரு ‘சீசன்’ பிசினஸ்! திமுக கதவைத் தட்டுறது, அதிமுக ஜன்னலை எட்டி பார்க்கிறது… கடைசியில வாசல்லயே நிக்கிறதுதான் தேமுதிகவோட தேர்தல் ஸ்ட்ராடஜியா? அன்னைக்கு கேப்டன் பின்னாடி ஒரு படையே இருந்துச்சு… இன்னைக்கும் அந்த படை இருக்கு, ஆனா வழிநடத்தத்தான் ஆள் இல்ல..!பிப்ரவரி 11, 2026, 18:49
பாஜகவை மட்டும் அடித்து ஓட்டு வாங்கி வரும் திமுக.. அதை தடுத்து நம்மை அடிக்கட்டும் என்பதற்காகவே திமுகவை மட்டும் விமர்சனம் செய்யும் விஜய்.. இதுகூட ஒரு உத்தி தான்.. அதிமுகவும், திமுகவும் நம்மை அடித்தால் களம் பாஜகவிடம் இருந்து மாறிவிடும்.. இதுதான் விஜய்யின் தந்திரமா? பாஜகவை சொல்லி ஓட்டு வாங்கிய திமுகவை திசை திருப்புகிறாரா விஜய்?பிப்ரவரி 11, 2026, 13:29
நடிகை விந்தியா, தமிழன் பிரசன்னா, மேயர் பிரியா, காயத்ரி ரகுராம்.. சென்னையில் போட்டியிடும் பிரபலங்கள்? ஸ்டாலின் தொகுதி மாறுறாரா? உதயநிதியை எதிர்த்து குஷ்பு போட்டியிடுவாரா? விஜய்யும் சென்னையில் தான் போட்டியிடுகிறாரா? பரபரக்கும் தலைநகர்..பிப்ரவரி 11, 2026, 11:13
2 வருஷமே ஆன ஒரு கட்சி தனியா முன்னேறுதுன்னா, சும்மா இல்லை.. திராவிட கட்சிகள் மேல் மக்கள் அந்தளவுக்கு வெறுப்பில் இருக்கிறார்கள்.. விஜயகாந்த், கமல்ஹாசன் கட்சி ஆரம்பிச்சப்ப வராத நம்பிக்கை விஜய் கட்சி மீது மக்களுக்கு வந்துருக்கு.. முதல்முறையா 2 திராவிட கட்சிகளும் தோற்பது உறுதி.. மக்கள் புரட்சிக்கு முன் பணமோ, கூட்டணியோ தூசுக்கு சமம்.. மக்களின் பவர் என்னன்னு அரசியல்வாதிக்கு இனிமேல் தான் புரியும்..!பிப்ரவரி 11, 2026, 07:47
கற்பனைக்கு ஒரு அளவில்லையா? 230 தொகுதிகளில் தவெக ஜெயிக்கும் என ஒரு சர்வே.. மீதமுள்ள 4 தொகுதிகளில் 2 கம்யூனிஸ்ட்கள் தலா 2 தொகுதிகளாம்.. அப்படியெனில் அதிமுக, திமுகவுக்கு ஜீரோவா? என்னங்கடா இது காமெடியா இருக்குது.. ஆசைப்படலாம், பேராசை கூடாது..!பிப்ரவரி 10, 2026, 18:29
எந்த அரசியல்வாதிக்கும் கிடைக்காத தானாக சேரும் கூட்டம் விஜய்யிடம் இருக்குது.. எனவே விஜய் இறங்கி அடிக்கலாம்.. யாரும் அவரை ஒன்றும் செய்ய முடியாது.. வெளியே வாங்க விஜய்.. இறங்கி அடிங்க. வர்றதை பார்த்துகிடலாம்.. நாங்க இருக்கோம்.. ஆவேசமடையும் தவெக தொண்டர்கள்..பிப்ரவரி 10, 2026, 11:55
ஆட்சியில் பங்கு என விஜய் சொன்னதே, திராவிட கட்சிகளின் கூட்டணியை குழப்புறதுக்கு தான்.. முதல் தேர்தலில் எந்த கட்சியும் கூட்டணிக்கு வராது என்பது விஜய்க்கு நன்றாக தெரியும்.. அதிமுக, திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தவே ஆட்சியில் பங்கு என்ற அஸ்திரத்தை விஜய் வீசினார்.. அவர் நினைத்தது போலவே இரு கூட்டணியிலும் சிக்கல்.. குறிப்பாக திமுக கூட்டணியில் விழுகிறது விரிசல்.. இதுதான் விஜய்யின் ராஜதந்திரம்..!பிப்ரவரி 10, 2026, 07:34