20 நாளில் முதல்வர் விஜய் மீது எவ்வளவு அவதூறுகள்.. எவ்வளவு பொய் குற்றச்சாட்டுக்கள்.. 200 ரூபாய் உபிக்களின் போராட்ட நாடகங்கள்.. ஆனால் விஜய்யின் அதிர்ஷ்டம் என்னவென்றால் மக்கள் இதை நம்பவில்லை என்பதுதான்.. விஜய் என்ன செய்ததாக குற்றச்சாட்டு கூறினாலும் என் மகன் தப்பு செய்ய மாட்டான்.. என் தம்பி தப்பு செய்ய மாட்டான்.. எங்க அண்ணன் தப்பு செய்ய மாட்டாரு.. இந்த நம்பிக்கை தான் சார் கடவுள்.. மக்கள் விஜய் மீது நம்பிக்கை வைத்திருக்கும் வரை பொய்கள் புயல் போல் வந்தாலும் புஸ்ஸூன்னு மாறிவிடும்…மே 29, 2026, 07:30
தூய அரசியல் என்பது மக்களுக்கு மட்டும் தான்.. அரசியல்வாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கு விஜய் ஒரு சிம்ம சொப்பனம்.. மக்களுக்கு நல்லதுசெய்வதில், நல்ல திட்டங்கள் இயற்றுவதில் தான் தூய சக்தி.. அந்த தூய சக்தியை அரசியல்வாதிகள் எதிர்பார்க்காதீங்க.. மக்களுக்கு மட்டும் தான் ஹீரோ.. அரசியல் கட்சிகளுக்கு வில்லன்.. முதல்வர் விஜய்க்கு மக்களுக்கு நல்லது செய்யவும் தெரியும்.. ஆட்சியை கவுக்க நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டவும் தெரியும்..மே 29, 2026, 07:30
டெல்லிக்கு போய் பிரஸ் மீட் வைக்கல, மைக்கை பிடிச்சு பேசலன்னு தப்புக் கணக்கு போட வேண்டாம்.. விஜய் பிரஸ்ல்ல பேச வந்தவர் கிடையாது.. எல்லா பிரஸ்ஸையும் தன்னை பத்தி பேச வைப்பவர்.. காமராஜர் அதிகம் பேசியதில்லை.. ஆனால் செயலில் ஈடுபடுவார்.. கர்மவீரர் காமராஜர் வழியில நம்ம முதல்வர் விஜய் … செயல் என்பது வார்த்தையில இல்ல, இனிமே எங்களோட ஒவ்வொரு ‘ஆக்ஷன்லயும்’ தான் இந்த விஜய்யோட பவர் தெரியும்!மே 29, 2026, 07:16
ஜெயலலிதாவுக்கு பிறகு மோடியை தனிமையில் சந்தித்த முதல் முதல்வர் விஜய் தான்.. மத்திய அமைச்சர்களும் உடன் இல்லை.. மாநில அமைச்சர்களும் உடன் இல்லை.. அதிகாரிகளும் இல்லை.. 25 நிமிடங்கள் பிரதமருடன் முதல்வர் தனியாக பேசினார்.. பாசிசம், பாயாசம் என பாஜகவை விமர்சித்திருந்தாலும், தமிழ்நாட்டின் முதல்வர் என்ற முறையில் உரிய மரியாதையை பிரதமர் தந்ததாக தகவல்.. ஊழல்வாதிகளை சிறைக்கு தள்ள இருவரும் ஒருங்கிணைவதாகவும் தகவல்.. ஏதோ பெருசா நடக்க போகுது…!மே 28, 2026, 18:20
விஜய்யை அமித்ஷா சந்திக்க மறுத்தது ஏன்? அமித்ஷாவின் தேர்தல் திட்டம் தமிழ்நாட்டில் மட்டும் தான் தோல்வி.. விஜய் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியை பிடித்திருக்கும்.. அதிமுகவை மிர்ட்டி முக்கிய பதவிகளை வாங்கியிருக்கும்.. அமித்ஷாவின் எல்லா ஆட்டத்தையும் தவிடுபொடியாக்கியவர் விஜய் தான்.. அந்த கோபமா?மே 28, 2026, 18:05
நாமளும் இன்ஸ்டாவில பிரபலம் ஆகுவோம்.. 2031ல்ல இன்ஸ்டாவை வச்சு ஆட்சியை பிடிச்சிடுவோம்.. திமுக மேலிடம் ஐடியா.. புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை தான்.. தவெக செய்தியெல்லாம் இன்ஸ்டாவுல வைரல் ஆகுதுன்னா, அது தானா எழுச்சியா நடக்குறது.. நீங்க இன்ஸ்டாவுல வைரல் ஆகனும்ன்னா, ஒரு போஸ்ட்டுக்கு 200 ரூபாய் கொடுக்கனும்.. அதுமட்டுமல்ல, உங்களுக்காக கூலிக்கு போஸ்ட் போட்டவனே எலக்சன் அன்னிக்கு விசிலுக்கு குத்திட்டு வந்துடுவான்.. போயி வேற மாதிரி யோசிங்க பாஸ்..மே 28, 2026, 16:15
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை.. 56 ஆண்டுகளாக கட்சிக்காரங்களுக்கு மட்டும் தான் வேலை. முதல்முறையாக இந்த வேலையை சாமானியர்களுக்கு வழங்க தவெக அரசு முடிவு.. தகுதியானவர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்ய முடிவு.. அரசியல் சிபாரிசு இருந்தா மட்டும்தான் அரசாங்க வேலைன்னு 56 வருஷமா ஒரு ரூல்ஸ் வச்சிருந்தீங்கள்ள… இன்னையோட அதை க்ளோஸ் பண்ணு! இனிமே எவன்கிட்ட தகுதி இருக்கோ, அவன் மட்டும்தான் செய்தித் துறையில சீட்ல உட்காருவான். இது சிபாரிசு அரசு இல்லடா… சாமானியனுக்கான ‘வெற்றிக் கழக’ ஆட்சி!மே 28, 2026, 15:57
அதிமுகவை உடைச்சாச்சு.. அடுத்த டார்கெட் திமுக தான்.. திமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு தவெக வலைவீச்சா? எதிர்க்கட்சியா இருந்து என்ன சம்பாதிக்க முடியும்.. இங்க வாங்க வாரிய தலைவர் பதவி தர்றோம்.. உதயநிதியால் தான் தோற்றோம்.. சீனியர் அமைச்சர்கள் வெளிப்படையாக பேச்சு.. ஸ்டாலின் தலைமைக்கே ஆபத்தா? கனிமொழி களம் இறங்குகிறாரா?மே 28, 2026, 10:30
தமிழ்த்தாய் வாழ்த்தில் காட்டும் அக்கறையை மாணவர்களின் தமிழ்ப்பாடத்தில் காட்டுங்கள்.. 40,000 மாணவர்கள் தமிழ் பாடத்தில் பெயில்.. இதுதான் நீங்கள் தமிழை வளர்க்கும் லட்சணமா? தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவது முக்கியமா? தமிழ்ப்பாடத்தில் எல்லா மாணவர்களும் பாஸ் ஆவது முக்கியமா? தமிழில் அரசியல் செய்தே அரசியல்வாதிகளுக்கு பழக்கமாகிவிட்டது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விளாசல்..மே 28, 2026, 10:15
விஜய்க்கு இப்போதைக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்.. தமிழகத்தில் இருந்து 2 திராவிட கட்சிகளையும் விரட்டி விடனும்.. அதுக்கு அப்புறம் விஜய்யா? அண்ணாமலையான்னு பார்த்திடலாம்.. விஜய் சந்திப்புக்கு பின் டெல்லி மேலிடம் முடிவு… 2031 தேர்தல் விஜய் அண்ணாமலை என மாறுமா? திமுகவும் அதிமுகவும் அவ்வளவு சீக்கிரம் தங்கள் இருப்பிடத்தை விட்டுக்கொடுக்குமா? மக்கள் கையில் தான் எல்லாமும்…மே 28, 2026, 09:58