Category: செய்திகள்

amitshah vs vijay

விஜய் அரசை பாஜக இப்போதைக்கு டிஸ்டர்ப் பண்ண வாய்ப்பு இல்லை.. தமிழகத்தில் பாஜகவுக்கு இருந்த பெரிய சவால் திமுகவும், திமுக கூட்டணியும்.. திமுகவையும் தோற்கடிச்சாச்சு.. கூட்டணி கட்சிகளையும் சைலண்ட் ஆக்கியாச்சு.. தமிழ்நாட்டில் என்.டி.ஏ செய்ய முடியாததை விஜய் தனியாக இருந்து செய்துள்ளார்.. காங்கிரஸ் விஜய் இணைவது அதிருப்தியாக இருந்தாலும் திமுக, அதிமுகவின் தோல்வி எதிர்காலத்தில் பாஜகவுக்கு லாபம் தான்.. கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியாத்தான் வருது…

மே 28, 2026, 07:45
vijay thirumavalavan

மத்திய அரசுடன் விஜய் இணக்கமாக இருந்தால் விசிக, இடதுசாரிகள் அதிருப்தி அடைவார்களா? ஆனால் இடதுசாரிகள் தவிர வேறு யாரும் ஆதரவு வாபஸ் என்று கூற முடியாது.. ஏனென்றால் அமைச்சர் பதவி கொடுத்து விஜய் லாக் செய்துவிட்டார்.. இடதுசாரிகள் 4 பேர் விலகினாலும் இப்போதைக்கு பிரச்சனை இல்லை.. ஒருவேளை எல்லோரும் சேர்ந்து ஆட்சியை கவிழ்த்தாலும் தேர்தலை தவிர வேறு ஆப்சன் இல்லை.. அப்போது விஜய் 200க்கும் மேல் அடித்துவிடுவார், இதையெல்லாம் மிரட்டுபவர்கள் யோசிப்பார்கள்.. மொத்தத்தில் விஜய் ஆட்சி மிரட்டப்படுமே தவிர கவிழ வாய்ப்பில்லை…!

மே 28, 2026, 07:31
cm and pm

பிஎம்ஸ்ரீ உள்பட மத்திய அரசின் முக்கிய திட்டங்களுக்கு முதல்வர் அனுமதி கொடுப்பார்.. மத்திய அரசும் தமிழக அரசு கேட்கும் நிதியை தாராளமாக வழங்கும்.. இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் பிஎம்ஸ்ரீ இருக்குது, தமிழ்நாடு ஒன்றும் தனிநாடோ தனித்தீவோ அல்ல.. நிதி வேனும்னா கொஞ்சம் இறங்கி வந்துதான் ஆகனும்.. தமிழ்நாட்டில் சில எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும்.. வழக்கம்போல் அமைதியாக இருந்து முதல்வர் அந்த எதிர்ப்பை சமாளிப்பார்…

மே 28, 2026, 07:15
stalin sad

ஒரு தொகுதிக்கு 4 அரசியல் ஆய்வாளர்கள்.. தேர்தல் ஸ்ட்ராட்டஜி சொல்ல ஒரு குழு.. கோடிக்கணக்கில் பணம் செலவு.. புகுந்து விளையாடிய ஐடி விங்.. இது பத்தாதுன்னு 24 மணி நேரம் தேர்தல் கணிப்புகளை கூறி வந்த உளவுத்துறை.. இத்தனை இருந்தும் கொளத்தூரில் கூட ஜெயிக்க முடியலையே ஸ்டாலின் சார்.. முதல்ல நீங்க உங்களை சுற்றி இருக்குற ஜால்ரா கூட்டத்தை விரட்டியடிங்க.. இல்லாட்டி கடைசி வரைக்கும் உங்களால எம்.எல்.ஏ கூட ஆக முடியாது.. முதல்ல தோல்வியை ஒத்துக்கோங்க.. அதுக்கு அப்புறம் தோல்விக்கு என்ன காரணம் ஆய்வு செய்யுங்க.. உங்களுக்கே ஒரு பெரிய உண்மை தெரியும்…

மே 27, 2026, 21:30
pm cm

ஒரே கல்லுல ரெண்டு திராவிடத்தையும் வீழ்த்திட்டிங்க.. இதை நாங்க செய்யனும்ன்னு எதிர்பார்த்தோம், முடியலை, ஆனால் நீங்க செஞ்சிட்டீங்க.. வாழ்த்துக்கள்.. மீண்டும் தமிழ்நாட்டுல திராவிடம் வந்துடக்கூடாது.. உங்களுக்கு என்ன வேனுமோ நாங்க செய்ய தயாராக இருக்கின்றோம்.. விஜய்க்கு வாக்குறுதி தந்ததா டெல்லி? திமுக மாதிரி மோடியிடம் விஜய் மோத மாட்டார்.. கொள்கை எதிரிதான், ஆனால் தமிழ்நாட்டுக்கு நிதி வேனும்ன்னா கொஞ்சம் அனுசரித்து தான் போகனும்..

மே 27, 2026, 21:16
vijay vs stalin4

எத்தனை தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தாலும் அதிமுக தேர்தலை புறக்கணிக்கவே வாய்ப்பு.. போட்டியிட்டு டெபாசிட் காலி அவமானம்படுறதுக்கு விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு போல் புறக்கணிக்கலாம்.. திமுக கண்டிப்பாக வேட்பாளர்களை நிறுத்தும்.. திருச்சி கிழக்கில் முக ஸ்டாலினே போட்டியிட வாய்ப்பு.. நாம் தமிழர் போட்டியிட்டாலும் வழக்கம் போல் டெபாசிட் காலியாகும்.. மொத்தத்தில் தேர்தலுக்கு முன் விஜய் சொன்னது போல் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் இடைத்தேர்தலிலும் போட்டி இருக்கும்..

மே 27, 2026, 17:30
vijay revolution

விஜய்க்கு அரசியல் தெரியாதுன்னு தான் எல்லோரும் சொன்னாங்க.. இப்ப என்னடான்னா, பழம்பெரும் அரசியல்வாதிக்கு கூட இல்லாத ராஜதந்திரத்தை பயன்படுத்துறாரு.. முக ஸ்டாலின், உதயநிதி பேசுவதை கண்டுகொள்வதே இல்லை.. பாஜகவை ஒரு கட்சியா கூட மதிக்கலை.. நீங்க பாட்டுக்கு கத்திகிட்டே இருங்க, நான் என் வேலையை பாக்குறேன்னு லெஃப்ட் ஹேண்டில டீல் பண்றாரு.. என்னடா நாம் இவ்வளவு கத்துறோம், இந்த மனுஷன் கண்டுக்கவே மாட்டேங்குறாரேன்னு அவங்களே ஒரு கட்டத்துல ஓஞ்சிருவாங்க.. இப்படி ஒரு அரசியல்வாதியை தமிழகம் பார்த்ததுண்டா?

மே 27, 2026, 17:16
FIGHT

தற்செயலாக நடந்ததா? அல்லது விஜய்க்கு இந்த அளவுக்கு ஆழமான அரசியல் தெரியுமான்னு புரியவே இல்லை.. திமுக ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை புலம்பி ஸ்டேட்மெண்ட் வெளியிடுது.. அதிமுக நடுத்தெருவுக்கு வந்து சண்டை போடுறாங்க.. விசிக நேரடியாக திமுகவுடன் மோத ஆரம்பிச்சிட்டாங்க.. என்ன நடந்தாலும் இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைன்னு இடதுசாரிகள் சாந்த சொரூபமா இருக்காங்க.. காங்கிரஸிலும் மோதல் ஆரம்பிச்சிருச்சு.. குதிரை பேரம் என ஜோதிமணி பேச ஆரம்பிச்சிட்டார்.. அந்த பக்கம் மாணிக்கம் தாகூர் தவெகவை முழுமையா ஆதரிக்கிறார்.. எல்லா கட்சியின் சுயரூபமும் வெளியே வந்துருச்சு.. இதெல்லாம் தற்செயலா நடந்ததா தெரியலையே…

மே 27, 2026, 17:05
காவல்துறை

அரசியல் தலையீடு இல்லாத காவல்துறை, துப்பாக்கி முனைக்கு இணையானது! இனி தமிழக மண்ணில் குற்றவாளிக்கு இடமில்லை, கூண்டில் மட்டும்தான் இடம்! லஞ்சம், ஊழல், அநீதி.. இவற்றுக்கு தமிழகத்தில் ‘நோ என்ட்ரி’! ஏன்னா இது ஜோசப் விஜய்யின் ஆட்சி, இங்கே சட்டமே உச்சம்.. சட்டம் என்பது வெறும் காகிதம் அல்ல, அது சாமானியனின் கேடயம்! அதை தூக்கி கையில் எடுக்கும் போது, குற்றவாளிகளின் கால்கள் நடுங்கத்தான் செய்யும்!

மே 27, 2026, 11:45