இதுக்கு முன்னாடி திமுகவை யாராவது எதிர்த்து பேசினா உடனே ‘சங்கி’ன்னு முத்திரை குத்தி ஆஃப் பண்ணுவாங்க.. இப்ப பாஜக எதிர்ப்புங்கிறது புஸ்வானம்ன்னு தெரிஞ்சிருச்சு.. அதுமட்டுமில்லை, பாஜகவோட கூட்டணிக்கும் ரகசியமாக பேச்சுவார்த்தை நடக்குது.. எனவே இனி ஒரு திமுககாரன் வாயில கூட சங்கிங்கிற வார்த்தை வராது.. அதுக்கு பதிலா தற்குறிங்கிற வார்த்தையை பயன்படுத்துவாங்க.. திமுகவை யாராவது எதிர்த்தால், அது நடுநிலையாளரா இருந்தா கூட அவரு தற்குறின்னு நெரேட்டிவ் பண்ணுவாங்க.. மொத்தத்தில திமுக திருந்த வாய்ப்பே இல்லை…ஜூன் 1, 2026, 07:53
திமுக அடிப்படையிலேயே தப்பு செய்கிறது.. ஆட்சியில் தவறு நடந்தால் தவெகவை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, அந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த விசிக, காங்கிரஸ், இடதுசாரிகளை கேள்வி கேட்டால் இன்னும் பவர்புஃல்லா இருக்கும்.. இப்படிப்பட்ட ஆட்சிக்கு தான் நீங்கள் ஆதரவு கொடுத்தீர்களா? என்று பழைய கூட்டணி கட்சிகளை கேள்வி கேட்டால், அந்த கட்சிகள் பதில் சொல்ல திணறும்.. திமுக நேரடியாக தவெகவிடம் மோதுவதால் மக்களே திமுகவுக்கு பதிலடி கொடுத்து ஆஃப் செய்துவிடுகிறார்கள்.. இது திமுகவுக்கு புரியவில்லை.. இனிமேலும் புரிய வாய்ப்பில்லை..ஜூன் 1, 2026, 07:39
தமிழ்நாட்டில் அமித்ஷாவின் சாணக்கியத்தனம் தோல்வி என யார் சொன்னது? அமித்ஷாவின் நோக்கங்கள் என்னென்ன? தமிழகத்தில் கூட்டணி ஆட்சி.. அதிமுக அழிய வேண்டும்.. திமுக கூட்டணி உடைய வேண்டும்.. இந்த மூன்றையும் பாஜக செய்யவில்லை என்றாலும் தவெக செய்துவிட்டதல்லவா? அதிமுகவை கிட்டத்தட்ட முழுமையாக உடைத்தாகிவிட்டது.. திமுக கூட்டணியில் தேமுதிக தவிர வேறு எந்த கட்சியும் இல்லை.. ஆக மொத்தம் அமித்ஷா நினைத்தது நடந்துவிட்டது.. இனிமேல் அமித்ஷாவின் ஆட்டம் தவெக பக்கம் திரும்பும்.. அதற்கு முதல் பந்து தான் முதல்வர் விஜய்யை சந்திக்க மறுத்தது.. அடுத்தது ஒன்னொன்னா நடக்கும்…மே 31, 2026, 21:00
அறுசுவை உணவு இருந்தும் சாப்பிடாமல் இருந்தால் தான் அதற்கு பெயர் விரதம்.. ஒன்றுமே இல்லாமல் சாப்பிடாமல் இருந்தால் அதற்கு பெயர் பட்டினி.. இனிமேல் திமுக எந்த கட்சியையும் கூட்டணியில் சேர்க்க கூடாது என்று கனிமொழி கூறியது தான் பெரிய காமெடி.. இனிமேல் உங்களை நம்பி எந்த கட்சி கூட்டணிக்கு வரும்? காங்கிரஸை பகைத்தாகிவிட்டது.. விசிக விடுதலை பெற்றுவிட்டது.. இடதுசாரிகள் இனி தவெகவை விட்டு வரமாட்டார்கள்.. ஐயூஎம்எல் உறவும் முடிந்துவிட்டது.. வைகோவும் விரைவில் வந்துவிடுவார்.. தேமுதிகவை அதிமுகவும் சேர்க்காது, தவெகவும் சேர்க்காது, அதனால் வேறு வழியின்றி திமுகவில் இருக்கும்… இப்போது சொல்லுங்கள் திமுக செய்வது விரதமா? பட்டினியா?மே 31, 2026, 20:48
தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் இருப்பதால் என்ன குடிமுழுகி போக போகிறது.. முதல் இரண்டு இடத்தில் இருப்பது தேசிய கீதமும், வந்தே மாதரம் பாடலும் தானே.. அதில் என்ன பாகிஸ்தான் தேசிய கீதமும், பங்களாதேஷ் தேசிய கீதமுமா இருக்குது, கோபப்பட.. முதலில் இருப்பது நமது தேசத்தின் பாடல் தான் என்பதில் நமக்கு பெருமை தானே.. என்னை விட என் அப்பா உயர்ந்துவிட்டார் என்றால் நமக்கு பொறாமையா வரும்? இந்த சீப்பான அரசியலை விட்டுவிட்டு மக்களுக்கு உருப்படியா எதையாவது சிந்தியுங்கள்…மே 31, 2026, 16:27
அரசியல் செய்ய பணம் தேவையில்லை என்பதை விஜய் நிரூபித்துவிட்டார்.. நேர்மை, இளைஞர்களை கவரும் கொள்கைகள் மட்டும் இருந்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்பதையும் விஜய் நிரூபித்துவிட்டார்.. இந்த இரண்டும் தான் அண்ணாமலைக்கு தரும் நம்பிக்கைகள்.. நேர்மை, இளைஞர்களை கவரும் கொள்கையோடு விஜய்க்கு இல்லாத ஒன்று அண்ணாமலையிடம் உள்ளது.. அதுதான் ஐபிஎஸ் அனுபவம் மற்றும் அரசியலில் ஆழமான அறிவு.. தனிக்கட்சி ஆரம்பித்து களத்தில் இறங்கினால் தமிழக அரசியலில் எதிர்காலம் விஜய் – அண்ணாமலை தான்.. ரெண்டு திராவிட கட்சிகளும் காணாமல் போய்விடும்..மே 31, 2026, 16:08
இடைத்தேர்தலில் போட்டியில்லை.. அதிரடி முடிவெடுத்தாரா ஸ்டாலின்? இனி தேசிய அரசியலில் கவனம்.. மாநில அரசியலை உதயநிதி பார்த்துகிடட்டும்.. மம்தா பானர்ஜியுடன் இணைந்து காங்கிரஸ் இல்லாத புதிய கூட்டணி? மம்தாவை பிரதமர் வேட்பாளராக பிரகடனப்படுத்தும் ஸ்டாலின்? ஜெயித்தால் மத்திய அமைச்சர் ஆவாரா?மே 31, 2026, 11:20
டேய் நீங்கள்ல்லாம் Gen Z பசங்களா? 80, 90 எல்லாம் ஜீன்ஸ் போட்டுட்டு வந்து Gen Z பசங்கன்னு ஏண்டா உண்மையான Gen Z தலைமுறைய கேவலப்படுத்துறீங்க.. வெட்ட வெட்ட தழைக்கிறது ஆலமரம் இல்லடா, வாழை மரம்.. எழுதி கொடுத்த வசனத்தை கூட சரியா படிக்க தெரியலை.. நீங்கள்ல்லாம் Gen Zன்னு சொன்னா நாங்க நம்பனுமா? காமெடிக்கு ஒரு அளவில்லையா? போயி சுகர் மாத்திரையை போட்டுட்டு படுத்து தூங்குங்கப்பா…மே 31, 2026, 11:04
சாமி இல்லைன்னு சொல்றவங்க கிட்டயும், சனாதனத்தை ஒழிக்கனும்ன்னு சொல்றவங்க கிட்டயும் இருந்த அறநிலையத்துறை இப்போது உண்மையான ஒரு ஆன்மீகவாதியிடம் உள்ளது. தெய்வம் தான் நின்று கொல்லும்.. ஆனால் அமைச்சர் ரமேஷ் உடனடியாக தட்டி கேட்பார்.. இறைவன் சன்னிதியில தப்பு செஞ்சவங்க யாராக இருந்தாலும் இனி தப்பிக்க முடியாது..மே 31, 2026, 08:04
சிங்கத்தோட பலம் நகத்துல இருக்குன்னா, ஒரு முதலமைச்சரோட பலம் அவரோட காவல்துறையில இருக்கு! காவல்துறையை கையில வச்சுக்கிட்டு, ரவுடிசத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குனாங்க பாரு… அதான் ஜெயலலிதா அம்மா ஸ்டைல்! ஸ்டாலின் தோத்ததுக்கு ஸ்டாலின் காவல்துறையை தன் கையில வச்சுகிட்டு அம்மா மாதிரி ஆக்சன் எடுக்காததும் ஒரு காரணம்.. ஆனால் முதல்வர் விஜய் அம்மா மாதிரி இரும்புக்கரம் கொண்டு சமூக விரோதிகளை அடக்குவார்.. தப்பு செஞ்சா தண்டனை கிடைக்கும்ங்கிற பயத்தை உருவாக்கிவிட்டார்…மே 31, 2026, 07:35