வெளிநாட்டு குளிர்பான நிறுவன விளம்பரத்தில் நடிக்க வந்த ஆஃபர் : நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல நோ சொன்னகேப்டன்

இன்றைக்கு இருக்கும் இளம் தலைமுறை ஹீரோக்கள் பலர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பல விளம்பரப் படங்களிலும் நடித்து தங்களுடைய பேங்க் பேலன்ஸை அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். இது அவர்களது தொழில்தான் என்றாலும் அதிலும் தன்னுடைய இரக்க குணத்தைக் காட்டியவர் கேப்டன் விஜயகாந்த்.

கேப்டன் விஜயகாந்த் இறந்த பின்பு அவர் செய்த உதவிகள் பல வெளி உலகுக்கு தினந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஒரு தொழில் துறையையே காப்பாற்றிய பெருமை கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு உண்டு. அப்போது பிரபலமாக விளங்கிய குளிர்பான நிறுவனம் தான் கோலா. தன்னுடைய தயாரிப்பான கொகோ கோலாவை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி மூலை முடுக்கெல்லாம் ஆர்டர்களைக் குவித்தது.

இந்நிலையில்,1998 ஆம் ஆண்டில் கொகோ கோலா நிறுவனம் தனது விளம்பர படத்தில் நடிப்பதற்காக விஜயகாந்திடம் அணுகியது. கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் சம்பளம் தருகிறோம் கோலா விளம்பரத்தில் நீங்கள் நடித்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

அந்த கால கட்டத்தில் 1 கோடி என்றால் இன்றைய கால மதிப்புப் படி கிட்டத்தட்ட 30 கோடி. ஆனால் விஜயகாந்த் அவர்கள் அந்த நிறுவனத்திடம் ஒரு கேள்வி கேட்டார். “நான் உங்கள் நிறுவன விளம்பரத்தில் நடித்தால் உண்மையிலேயே என் ரசிகர்கள் அனைவரும் வாங்குவார்கள். என் முகத்திற்காக பொது மக்கள் அனைவரும் உங்கள் கொக்க கோலாவை வாங்கி குடிப்பார்கள்.

இளையராஜா இசையமைத்த ஒரே அஜீத் படம் : யார் டைரக்டர்ன்னு தெரியுமா?

இதனால் பாதிக்க பட போவது என் தமிழ் மக்கள் தான். ஏனென்றால் என் தமிழகத்தில் சிறு சிறு குளிர்பான நிறுவனம் நிறைய உள்ளது. நான் உங்கள் கொக்ககோலா நிறுவனத்தில் நான் பணத்திற்காக நடித்தால் தமிழகத்தில் உள்ள சிறிய குளிர்பான நிறுவனம் பாதிக்கப்படுவார்கள். அதனால் எனக்கு பணம் முக்கியம் இல்லை. என் தமிழ் நாடும் தமிழ் மக்களும் தான் முக்கியம். என்னால் தமிழக நிறுவனம் பாதிக்கபடும் என்றால் அந்த விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன்“ என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார் கேப்டன்.

ஆனால் இன்றைக்கு பணத்திர்க்காக எத்தனையோ நடிகர்கள் கொக்ககோலா விளம்பரத்தில் நடிக்கிறார்கள் ஆனால் பணத்தை விட தமிழகம்தான் எனக்கு முக்கியம். என்று கூறிய ஒரே மனிதன் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே. இன்றைக்கு அல்ல என்றைக்கும் தமிழ் படத்தை தவிர வேறு எந்த மொழி படத்திலும் நடிக்க மாட்டேன் என்று சொன்ன ஒரே மனிதன். அதனால் அவர் இறப்பிலும் கூட தமிழகமே கண்ணீர்க் கடலில் மிதந்து அவருக்கு புகழஞ்சலி செலுத்தியது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews