பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலில் இப்படி ஓர் அதிசயமா? வைரமுத்துவும் இளையராஜாவும் செய்த மேஜிக்!

ஆரம்ப காலகட்டத்தில் வெறும் ஊமைப் படங்களாக பார்த்து வந்த சினிமா ரசிகர்களுக்கு இசையும், வசன உச்சரிப்பும் இடம்பெற்ற பிறகு மளமளவென சினிமா தன்னைத் தானே அசுர வளர்ச்சியை அடைந்து கொண்டது. தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து இசையும், வசனமும் இடம்பெற ஆரம்பித்து பின் எம்.எஸ்.வி-கண்ணதாசன் கூட்டணியாகவும், அதன்பின் வாலி-இளையராஜா கூட்டணியாகவும் தொடர்ந்து. வைரமுத்துவின் வருகைக்குப்பின் வழக்குச் சொற்கள் பல பாடல்களாக மாறின.

புதுக்கவிதையில் பாடல்கள் இயற்றி மரபுக் கவிதை பாடலை ஓரங்கட்டினார் வைரமுத்து. அதன்பின் நிழல்கள் படத்தில் இளையராஜா-வைரமுத்து-பாரதிராஜா கூட்டணி பெரும் வெற்றியையும் பல ஹிட் பாடல்களையும் உருவாக்கியது.

இவர்கள் மூவர் கூட்டணியில் இடம்பெற்ற ஒரு பாடல்தான் ‘பொத்தி வச்ச மல்லிகை மொட்டு..‘ 1983-ஆம் ஆண்டு வெளியான மண்வாசனை திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் உருவான விதத்தை கவிஞர் வைரமுத்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். வழக்கமாக இசையமைப்பாளர்கள் கவிஞர்களின் பாடலை வாங்கிப் படித்து தங்கள் மெட்டுக்கு ஏற்ப அதில் ஏதாவது திருத்தங்கள் கூறி பின் இசையமைப்பர். ஆனால் வைரமுத்துவின் பாடல்களை இளையராஜா வாங்கிப் படிக்க மாட்டாராம்.

என்.எஸ்.கிருஷ்ணணுக்கு கதை எழுத மறுத்த அறிஞர் அண்ணா.. இதான் காரணமா?

ஏனெனில் வைரமுத்துமேல் அபார நம்பிக்கை வைத்திருப்பாராம் இளையராஜா. பாடல் எழுதியவுடன் பாடகர்களுக்கு மட்டும் வைரமுத்து அதனை ஒரு முறை விளக்கி விட்டு பின் ரிக்கார்டிங் தொடங்குமாம்.

இவ்வாறு பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலில் சரணத்தில் இடம்பெறும்

மாலையிட காத்து அல்லி இருக்கு
தாலிசெய்ய நேர்த்து சொல்லி இருக்கு..

என்ற வரிகளை வைரமுத்து எழுதி வைத்திருந்தாராம். ஆனால் இந்த வரிகளை அறியாத இளையராஜாவோ அதே நேரத்தில் பாடலில் இடையில் சேர்க்க திருமண இசையை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்தாராம். வைரமுத்துவின் இந்த வரிகளும், இளையராஜாவின் இந்த இசையும் இரண்டும் சேர்ந்த போது பாடல் மிக அருமையாக வந்ததாம். எஸ்.பி.பி.யும், ஜானகியும் இந்தப் பாடலை காதல் ரசம் சொட்டச் சொட்ட பாடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இளையராஜா, வைரமுத்துவின் கூட்டணியானது ஒருவர் யோசிப்பதை அவரும் யோசித்து பின் இருவரின் ரசனைகளும் ஒன்றாக இருந்தது அதிசயமாகவே இருக்கிறது என வைரமுத்து அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...