பெரிய ஸ்டாருக்கான அறிகுறியில் கவின்.. ஸ்டார் படத்தின் டிரைலர் எப்படி இருக்கு?

தமிழ் சினிமாவில் அடுத்த சிவகார்த்திகேயன் ரெடியாகிவிட்டார். ஆம். சந்தானம், சிவகார்த்திகேயன் ஆகியோர் எப்படி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியிலிருந்து எப்படி படிப்படியாக முன்னேறி சினிமாவில் நிரந்தர இடம் பிடித்தனரோ அதே வரிசையில் தற்போது இணைந்துள்ளார் கவின். திருச்சியைச் சேர்ந்த கவின் முதன்முதலாக ஸ்டார் விஜய்யில் கனாகாணும் காலங்கள் சீரியல் மூலமாக சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி 2 சீரியலில் ஹீரோவாக நடிக்க தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

தொடர்ந்து பிக்பாஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தவர் பீட்சா, இன்று நேற்று நாளை, சத்ரியன் போன்ற படங்களில் கௌரவத் தோற்றத்தில் நடித்தார். தொடர்ந்து நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் முதன் முதலாக ஹீரோவாக நடித்தார். தனது முதல் படத்திலேயே ஹீரோவாக கவனம் ஈர்த்த கவினுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

எனினும் அவர் கதையைத் தேர்ந்தெடுப்பதில் கவனத்துடன் இருந்தார். இதற்கு அடுத்து வந்த ‘லிப்ட்’ படம் தமிழ் சினிமாவில் கவினை கவனிக்க வைத்தது. குறிப்பாக ‘என்னா மயிலு..’ என்ற சிவகார்த்கேயன் குரலில் உருவான பாடல் இவருக்கு ஹிட் கொடுக்க அடுத்து டாடா படத்தில் நடித்தார்.

2023-ல் வெளிவந்த முதல் 10 வெற்றிப் படங்களில் டாடாவும் லிஸ்ட்டில் இணைந்தது. இதனையடுத்து கவின் நட்சத்திர அந்தஸ்து பெற்றார். இந்தப் படம் அவருக்கு ஹிட் கொடுக்க தற்போது அடுத்த படமான ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே ஸ்டார் என்ற தலைப்பில் டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் 2001ல் படம் ஒன்று வெளிவந்தது. இந்நிலையில் இதே தலைப்பினை எடுத்து தற்போது கவின் நடிப்பில் வருகிற மே 10ல் படம் வெளியாக உள்ளது.

நினைவோ ஒரு பறவை பாடல் இப்படித்தான் உருவாச்சா? கமல் – ஜானகி கூட்டணியில் உருவான முதல் பாடல்

ஸ்டார் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. ஏற்கனவே கவின் பெண் வேடமிட்டு வெளியான புகைப்படங்கள் வைரலான நிலையில் டிரைலரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் திரைத்துறையில் சாதிக்கும் ஓர் இளைஞனாக கவின் வருகிறார். இதற்காக அவர் படத்தில் மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ளார். டிரைலரிலேயே கவின் நடிப்பு பக்குவம் தெரிகிறது. லால் தந்தையாக நடித்துள்ளார். அதிதி போஹங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஏற்கனவே பியார் பிரேமா காதல் என்ற வெற்றிப் படத்தினைக் கொடுத்த இயக்குநர் இளனின் அடுத்த படம் இது. தனது முந்தைய படத்தில் யுவன்ஷங்கர்ராஜா இசையில் சூப்பர் ஹிட் பாடல்கள் மூலம் கவனிக்க வைத்தவர் மீண்டும் யுவனுடன் ஸ்டார் படத்திலும் கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படி தரமான கூட்டணி இணைந்துள்ளதாலும், டிரைலரும் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளதாலும் கவின் இந்த ஆண்டும் அடுத்த வெற்றியைச் சுவைக்கத் தயாராகி விட்டார்.

கவின் தேர்ந்தெடுக்கும் கதைக் களங்கள் சிறந்த வரவேற்பினைப் பெற்று வரும் நிலையில் ஸ்டார் படமும் அந்த ரகத்தினைக் கொண்டதாகவே உள்ளது. தற்போது 2K கிட்ஸ்களின் அபிமான ஹீரோவாக சிவகார்த்திகேயன் இருந்து வரும் நிலையில் அவரைப் போலவே சின்னத்திரையில் இருந்து வந்து புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல் ஸ்டார் ஹீரோவாகவும் உருவாகிக் கொண்டிருக்கிறார் கவின்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...