இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது பிரிந்து 74 ஆண்டுகள் கழித்து சந்தித்த அண்ணன்- தம்பிகள்

இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் பிரிந்தபோது பிரிந்த இரண்டு சகோதரர்கள் 74 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்த சம்பவம் மனதில் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

முகமது ஜின்னாவின் தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையின்படி இந்தியா- பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகளும் 1947 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னர் பாகப் பிரிவினை செய்தது.

அப்போது குழந்தைகளாக இருந்த முகமது சித்திக் மற்றும் முகமது ஹபீப் என்ற சிறுவர்கள் பிரியும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அண்ணன் முகமது ஹபீப் இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் வசித்துள்ளார், தம்பி முகமது சித்திக் பாகிஸ்தானில் உள்ள பைஸ்லாபாத்தில் வசித்து வந்துள்ளார்.

பல ஆண்டுகளாக தம்பி முகமது சித்திக் அண்ணன் ஹபீப்பை சந்திக்க முயற்சி செய்துள்ளார், ஆனால் அண்ணனைக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தநிலையில் உறவினர்கள் மூலம் தேடல் பயணத்தைத் துவக்கி உள்ளார்.

சமூக ஊடகங்கள் மூலம் ஹபீப்பை கண்டுபிடித்த உறவினர்கள் இருவரையும் சந்திக்க வைக்க ஏற்பாடுகள் செய்தனர்.

அதன்படி ஹபீப்- சித்திக் இருவரும் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான கட்டாக் பூரில் உள்ள குருத்வாராவில் சந்தித்து உள்ளனர்.

74 ஆண்டுகள் கழித்து அண்ணன்- தம்பி சந்தித்த நிலையில் இருவரும் கண்ணீர் மல்க கட்டிப் பிடித்து பாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.