ஒரு மாசம் ரத்தம் வந்துச்சு.. உண்மையை மறைத்த வடிவேலு.. அவஸ்தைப்பட்ட போண்டாமணி!

தமிழில் நாகேஷ், கலைவாணர், வடிவேல், விவேக், கவுண்டமணி, செந்தில் என பல புகழ் பெற்ற காமெடி நடிகர்கள் இருந்தாலும் இவர்களுடன் இணைந்து நடிக்கும் சிறிய காமெடி நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு பெறக்கூடியவர்கள் தான். அந்த வகையில் மிக முக்கியமான ஒரு காமெடி நடிகர் தான் போண்டாமணி.

தீவிர கவுண்டமணி ரசிகரான போண்டாமணி, கேத்தீஸ்வரன் என்ற தனது பெயரை கவுண்டமணி ஸ்டைலில் போண்டாமணி என்றும் மாற்றிக் கொண்டார். பாக்யராஜ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான போண்டாமணி, சுமார் 150 க்கு அதிகமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார். வடிவேலுவுடன் இணைந்து பல காமெடி காட்சிகள் நடித்துள்ள போண்டாமணி, “அடிச்சு கூட கேப்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க” என்ற வசனம் பேசும் காமெடி காட்சிகள் காலம் கடந்து நிலைத்து நிற்கக் கூடியவை ஆகும்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போதே இவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததாக கூறப்பட்ட நிலையில் சில பிரபலங்களும் பண உதவி செய்திருந்தனர். சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பி இருந்த போண்டாமணி சமீபத்தில் திடீரென தனது வீட்டில் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மருத்துவமனைக்கு அவரை கொண்டு சொல்ல, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் போண்டாமணியின் மறைவு, தமிழ் சினிமா பிரபலங்கள் பலரையும் வேதனையில் ஆழ்த்தி இருந்தது. அவருக்கு பலரும் பிரியாவிடையை அஞ்சலியாகவும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சுந்தரா டிராவல்ஸ் படத்தில் ஒரு காட்சியில் நடித்த போது தனக்கு நேர்ந்த வேதனை குறித்து நடிகர் போண்டாமணி ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்த கருத்து தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
bonda

சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வரும் அனைத்து காமெடி காட்சிகளும் ஹிட் ரகம். அதிலும் மறைந்த நடிகர் முரளி வைத்திருக்கும் பஸ்ஸில் மணமகனாக போண்டாமணியை வடிவேலும், முரளியும் சேர்ந்து அலங்கரித்து பேருந்து அருகே கூப்பிட்டு பின்னர் அவர் மீதே புகைவிடும் காட்சி சிரிப்பு பட்டாசு தான். இந்த காட்சி சிரிப்பாக இருந்தாலும் அதில் போண்டாமணி எடுத்த ரிஸ்க் மிகப்பெரிது.

அது பற்றி பேசிய போண்டாமணி, “அந்த காட்சியில் புகை என் மீது அடிக்கப் போவதை என்னிடம் யாருமே சொல்லவில்லை. அண்ணன் வடிவேலு புகை அதிகமாக வருவதற்காக வெடி மருந்து கருப்பு டை உள்ளிட்டவற்றை கலந்து வெடி வைக்கும் ஆட்களை அழைத்து கரெக்டாக ஆக்ஷன் என்றதும் அதில் வெடி வெடிக்க வைத்தார். அதிலிருந்து வந்த கருப்பு பொடி என் உடல் முழுவதும் ஆகியதுடன் மட்டுமில்லாமல் என் கண்ணையும் வேதனை அடைய வைத்தது.

அதுமட்டுமில்லாமல் ஒரு மாதமாக என் மூக்கில் இருந்து கருப்பு நிறத்தில் ரத்தம் வடிந்து கொண்டே தான் இருந்தது. எனது நிலையறிந்து அண்ணன் வடிவேலு எப்போதும் நலம் விசாரித்துக் கொண்டே இருந்தார். மேலும் அவர் அப்படி செய்ததற்காகவும் சற்று வருந்தியும் போனார்” என போண்டா மணி தெரிவித்துள்ளார். அந்த அளவுக்கு ஒரே ஒரு காட்சிக்காக ரிஸ்க் எடுத்து நடித்ததால் தான் தனக்கு அந்தளவு பேர் கிடைத்தது என்றும் இன்னொரு பக்கம் பெருமிதத்துடனும் அவர் குறிப்பிடுகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.