கேபரே நடனத்தால் புகழ் பெற்றவர்.. சல்மான்கான் அப்பாவுடன் திருமணம்.. நடிகை ஹெலன் வாழ்க்கைப்பாதை!

தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதா, அனுராதா, ஜோதிலட்சுமி, ஜெயமாலினி உள்ளிட்டோர் ஒரு பாடலுக்கு நடனமாடியே புகழ்பெற்றவர்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் பாலிவுட் திரை உலகில் கேபரே நடனமாடியே புகழ் பெற்றவர் என்றால் அவர்தான் நடிகை ஹெலன்.

நடிகை ஹெலன் பர்மாவை சேர்ந்தவர். இரண்டாம் உலகப்போர் நடந்த போது அவரது தாயார் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு இந்தியாவிற்கு நடந்தே வந்தார். அவர்களிடம் சுத்தமாக பணம் இல்லை. வரும் வழியில் இருந்த சிலர் தான் அவர்களுக்கு உதவி செய்தார்கள். அப்போது ஹெலன் தாயார் கர்ப்பமாகவும் இருந்தார். நடந்து வந்து கொண்டிருந்த வழியில் அவருக்கு குறைப்பிரசவம் ஆனது. அதனை அடுத்து அசாம் எல்லையில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஹெலன் தாயார் சிகிச்சை பெற்று அங்கேயே தனது குழந்தைகளுடன் சில மாதங்கள் தங்கி இருந்தார்.

நடித்தது 700 படங்கள்.. பாதிக்கு மேல் ஒரு பாடல் நடனம்.. நடிகை அனுராதாவின் அறியப்படாத தகவல்..!

helen1

அதன் பிறகு தான் அவர்கள் கல்கத்தா வந்து அங்கிருந்து பம்பாய் வந்தார்கள். தனது குடும்பத்தின் வறுமை காரணமாக ஹெலன் சிறு வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். ஹிந்தியில் வெளியான ஹௌரா பிரிட்ஜ் என்ற திரைப்படத்தில் ஒரு காபரே டான்ஸ் ஆடினார். அந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் அதன் பிறகு அவர் பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.

தமிழிலும் சில படங்களில் ஹெலன் நடனமாடியுள்ளார். எம்ஜிஆர் நடித்த சங்கே முழங்கு, பாக்தாத் திருடன் ஆகிய படங்களிலும் சிவாஜி நடித்த உத்தமபுத்திரன், நான் சொல்லும் ரகசியம் ஆகிய படங்களிலும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். மேலும் தமிழில் இவரை பிரபலப்படுத்திய படம் என்றால் அது ரஜினிகாந்த் நடித்த பில்லா தான்.

கொள்ளை கூட்டத் தலைவன் பில்லா கேரக்டரில் ரஜினி நடித்திருந்த நிலையில் அவரிடம் வேலை பார்க்கும் ஒருவர் தனது காதலியுடன் தப்பித்து செல்லும் போது ரஜினி அவரை கொலை செய்து விடுவார். இதனை அடுத்து அந்த நபரின் காதலியாக நடித்திருந்த ஹெலன் ரஜினியை பழிவாங்க முடிவு செய்வார். நினைத்தாலே இனிக்கும் சுகமே என்ற பாடலை பாடியே அவர் ரஜினியின் கவனத்தை திசைதிருப்பி போலீசாரிடம் மாட்டவைக்க முயற்சிப்பார். ஆனால் தன்னை மாட்ட முயற்சித்த ஹெலனை வைத்து ரஜினிகாந்த் தப்பிப்பார் என்பது தான் அந்த படத்தில் வரும் சுவாரஸ்யமான காட்சியாக இருக்கும்.

பட்ஜெட்டை விட 800 மடங்கு லாபம்.. எம்ஜிஆர் இயக்கிய முதல் திரைப்படம்..! என்ன படம் தெரியுமா?

helen2

நடிகை ஹெலன் 1957ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் இயக்குனர் பிரேம் நாராயணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது அவரைவிட பிரேம் நாராயணனுக்கு 27 வயது அதிகம். இதனை அடுத்து அவர் 1974 ஆம் ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார்.

அதன் பிறகு 1981 ஆம் ஆண்டு சலீம் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சலீம் கானுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய நான்கு குழந்தைகள் இருந்தனர் என்பதும் அவர்களின் ஒருவர் தான் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் சல்மான் கான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சலீம் கான் மற்றும் ஹெலன் தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்பதால் அவர்கள் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார்கள். சல்மான் கான் உள்பட முதல் தாரத்தின் 4 குழந்தைகளும் ஹெலன் மீது மிகவும் அன்பாகவும் பாசமாகவும் இருந்தர்கள். சித்தி என்ற வேறுபாடு இல்லாமல் அவரையும் இன்னொரு அம்மாவாகவே நினைத்தார்கள்.

கோடிக்கணக்கில் லாபம் பெற்ற அமிதாப் படம்.. ரீமேக் செய்து தோல்வி அடைந்த ரஜினிகாந்த்..!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஹெலனுக்கு மத்திய அரசு கடந்த 2010 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...