இளையராஜா பயோபிக் போஸ்டரில் குறை!.. அடிப்படையே தெரியல.. தனுஷை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

நடிகர் தனுஷ் தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தில் நடிக்க உள்ள நிலையில் நேற்று அப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். அந்த போஸ்டர் குறித்து ப்ளு சட்டை மாறன் தனது டிவிட்டர் பக்கதில் பகிர்ந்திருக்கும் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் மேஸ்ட்ரோ என அழைக்கப்படும் இளையராஜா அன்னக்கிளி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜா அவர்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் பவதாரணி. இவரது இரண்டு மகன்களும் இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா பயோபிக்:

மகாநதி, எம்.எஸ்.தோனி, தலைவி என பல வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வரும் நிலையில் தற்போது இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக உருவாக்க உள்ளனர். அதில் இளையராஜாவின் மிகப் பெரிய ரசிகராக இருக்கும் தனுஷே அவரது கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

கடைசியாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் சரியாக ஓடாத நிலையில் தொடர்ந்து அதே இயக்குநருடன் தனுஷ் இளையராஜாவின் பையோபிக்கை எடுக்க முடிவெடுத்திருப்பது ஏன் என்பது கேள்விக் குறியாக உள்ளது. மேலும் தனுஷ் இயக்கி கொண்டிருக்கும் ராயன் படத்தை முழு ஈடுப்பாட்டுடன் உருவாகி கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகளை அக்டோபர் மாதம் தொடங்கி 2025ம் ஆண்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தனுஷ் சேகர் கம்முலா இயக்கும் குபேரா படத்திலும் நடித்து வருகிறார். ஆக்ஷன் திரில்லராக இருக்கும் இப்படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா, ஜிம் சர்ப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் கலாய்:

மேலும், இளையராஜா பையோபிக் படத்தின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. அதில் தனுஷ் இளையராஜாவாக சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஆர்மோனியம் பெட்டியுடன் சேற்றில் நிற்பது போல போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தனர். ஆர்யா நடித்திருந்த மதராசப்பட்டினம் படத்தில் சென்னையை எவ்வளவு அழகாக காட்டியிருப்பாங்க இது என்ன சேறும் சகதியுமா, ராஜா 70பது களில் வரும் போதே தார்சாலையாக தான் இருந்தது என அப்போஸ்டருக்கு கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையி ப்ளு சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், அடிப்படை ஆராய்ச்சி கூட இல்லாத போஸ்டர் டிசைன். அருண் மாதேஸ்வரனும், தனுஷூம்.. இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்துருக்காங்களோ..” என கலாய்த்துள்ளார்.
கேப்டன் மில்லர் படத்தின் தோல்விக்கு பிறகும் தனுஷ் இப்படத்தை இயக்க அருண் மாதேஸ்வரணுக்கு வாய்ப்பளித்தை நினைத்தால் இப்படத்தின் மீது இருக்கும் எதிர்ப்பார்ப்பை குறைத்து விடுகிறது என பலரும் கமெண்ட் செய்து வருகின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...