நிகோலய் இப்படித் தான் காதலை ப்ரபோஸ் பண்ணார்… வரலஷ்மி எமோஷனல் பகிர்வு…

நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்தவர் தான் நடிகை வரலஷ்மி சரத்குமார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா போன்ற மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2012 ஆம் ஆண்டு ‘போடா போடி’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அடுத்ததாக 2014 ஆம் ஆண்டு கன்னடத்தில் ‘மாணிக்யா’ என்ற திரைப்படத்தில் நடித்தார். தனது இரண்டாவது படமான ‘மாணிக்யா’ வெற்றிப் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் வசூல் சாதனையை படைத்தது. அதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு நடிகர் சசிகுமார் அவர்களுடன் இணைந்து ‘தாரை தப்பட்டை’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

பின்னர் ‘விக்ரம் வேதா’, ‘நிபுணன்’, ‘சண்டக்கோழி 2’, ‘சர்கார்’ போன்ற திரைப்படங்களில் வெயிட்டான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார். எந்த கதாபாத்திரமானாலும் கச்சிதமாக நடிப்பவர். பெரும்பாலும் நெகடிவ் ரோலில் நடிப்பார். அதிகம் சம்பளம் வாங்கும் குணச்சித்திர நடிகர்களில் வரலட்சுமியும் ஒருவர்.

இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி வரலஷ்மிக்கும் தனது காதலரான மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிகோலய் என்பவருக்கும் குடும்பத்தார் முன்னிணியில் ப்ரைவேட்டாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார் வரலஷ்மி. அதைப் பார்த்த அவரது ரசிகர்கள் நீங்க எப்போ கமிட் ஆனீங்க என்ற கேள்வியுடன் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட வரலஷ்மி நிக்கோலய் எப்படி காதலை ப்ரபோஸ் பண்ணினார் என்பதை எமோஷனலாக பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், நானும் நிக்கோலையும் 14 வருடமாக நண்பர்கள். தானாகவே எங்கள் இருவருக்கும் எல்லா விஷயத்திலேயும் ஒத்துப் போனது. ரெண்டு பேருக்கும் பிடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளவில்லை. ஒருநாள் நிக்கோலய் காதலை ப்ரபோஸ் பண்ணினார். அதுவும் அப்பா, ராதிகா அம்மா எல்லாருடைய முன்னிலையில் ப்ரபோஸ் பண்ணினார். அந்த நொடி என் வாழ்வில் மிகவும் எமோஷனலானது என்று பகிர்ந்துள்ளார் வரலஷ்மி சரத்குமார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...