அவரா பப்ளிசிட்டி விரும்பாத ஆளு.. நடிகர் அஜித்தை பாரபட்சம் பாக்காம கலாய்ச்ச ப்ளூ சட்டை மாறன்!..

Ajith Vs Blue Sattai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இதற்கு முன்பாக துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது. நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களுக்கு பிறகு, இயக்குனர் ஹெச். வினோத் மற்றும் அஜித் குமார் ஆகியோர் துணிவு படத்தில் மூன்றாவது முறையாக இணைந்திருந்தனர். பொங்கல் விருந்தாக கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகவும் அமைந்திருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் குமார் ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால், அதன் பின்னர் அந்த கூட்டணி முறிந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு வர, தடம், மீகாமன் உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியுள்ள மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் தற்போது அஜித்குமார் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பிற்கு பின்னர் படம் பற்றிய எந்தவித அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. ஆனால் அதே வேளையில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து வெளிநாட்டில் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார்.

மேலும் விடாமுயற்சி படத்தில் அஜித் குமாருடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோரும் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிகின்றது. அதே போல, இவர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலாகி இருந்தது. விடாமுயற்சி படம் இந்த ஆண்டு மே மாதம் வெளியாகலாம் என்ற தகவலும் பரவி வரும் சூழலில், படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பிற்காகவும் அஜித் குமாரின் ரசிகர்கள் காத்திருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் அஜித் குமாரை கலாய்த்து ப்ளூ சட்டை மாறன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு அதிக கவனம் பெற்று வருகிறது. பொதுவாக தன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூட தலை காட்ட விரும்பாதவர் அஜித் குமார். அவரது புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் வெளியாவதன் மூலம் தான் அவரை பொது இடங்களில் காண முடியும் என்ற சூழலில் அதிகம் பப்ளிசிட்டி விரும்பாத நடிகர் என அஜித்தை பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இதனிடையே, கடந்த சில தினங்களாக விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் இருந்து அஜித் குமாரின் புகைப்படங்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன. அவருடன் ரசிகர்கள் மற்றும் ஆரவ் உள்ளிட்ட பிரபலங்களும் போட்டோக்கள் எடுத்து இணையத்தில் வெளியிட அவை அதிக அளவில் லைக்குகளையும் அள்ளுகிறது.

இது பற்றி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், “பப்ளிசிட்டியை விரும்பாத ஒரே நடிகர் அஜித்தின் ஃபோட்டோ தினமும் ஒன்று ரிலீசாகும். மற்றபடி சத்தியமாக பப்ளிசிட்டி பிடிக்காது” என அஜித்தை மறைமுகமாக கலாய்த்துள்ளார். ரஜினி உள்ளிட்ட நடிகர்களையும் எக்ஸ் தளத்தில் விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறன், தற்போது அஜித் குமாரை பற்றி பேசியுள்ள கருத்தும் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.