இளையராஜாவிடம் அதை நான் எதிர்பார்க்கவே இல்லை!.. மிரண்டு போன பாரதிராஜா!..

ஒரு படத்திற்கு இசையமைப்பாளரின் பங்கு என்பது ஹிட் பாடல்களை கொடுப்பதைத் தாண்டி பின்னணி இசையிலும் அவரின் மிக மிக முக்கியமானது. பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதை ரஜினி தன்னுடைய படங்களுக்கு நடந்ததைக் கொண்டு பல மேடைகளில் கூறியிருக்கிறார். பாட்ஷா முதல் ஜெயிலர் படம் வரை பின்னணி இசையினால் மட்டுமே அப்படம் அடுத்த கட்டத்திற்கு சென்று வெற்றியடைந்தது என்றும் கூறியிருக்கிறார்.

அதேபோல பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை பற்றி அனுபவங்களை பகிர்ந்துள்ளார். மேலும் பாரதிராஜா கூறியதாவது ,”1985 ஆம் ஆண்டு ”முதல் மரியாதை” திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு கதை எழுதி தயாரித்து இயக்கியிருப்பவர் பாரதிராஜா. சிவாஜி கணேசன்,ராதா,சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பார். ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அதேபோல பின்னணி இசையும் மிக மிக முக்கியமானது”.

”கதை என்பது கரு என்றால் அதன் ஜீவ மூச்சு இசைதான். படங்களில் தவறுதலாக காட்சி அமைக்கப்பட்டிருந்தாலும் அதை சரி செய்வது இந்த பின்னணி இசை தான். அந்த விஷயத்தில் எனக்கும் இளையராஜாவுக்கும் மிகுந்த உடன்பாடு உண்டு என்று கூறினார். முதல் மரியாதை திரைப்படத்தின் ஒரு காட்சியின் பின்னணி இசை என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அப்படத்தில் ஒரு பெண்ணிடம் திருடன் நகைகளை பறித்து ஓட பார்க்கிறான். அவள் அவனை எதிர்த்து போராடுகிறாள். பின்னர் திருடனோ அவளை ஆற்றில் மூழ்கடித்து சாவடிக்கிறான்.

”பின் சில நேரம் கழித்து அவளது கணவன் அங்கு வந்து இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறான். அவன் கையில் கொண்டு வந்த புல்லாங்குழலை வானை நோக்கி வீசிவிட்டு செவிலி என்று கத்துகிறான். அப்போது அந்த காட்சியை நான் ஃப்ரீஸ் செய்து விட்டேன். இப்போது இவள் இறந்த செய்தி அவள் குடும்பம் மற்றும் கிராம மக்கள் என அனைவருக்கும் தெரிய வேண்டும். பின்னர் அனைவரும் அங்கு வர வேண்டும். ஆற்றில் இருந்து பிணத்தை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு ஊரே கூட்டி பஞ்சாயத்து வைக்க வேண்டும்”.

”என இதை முழுவதுமாக காட்சிப்படுத்த வேண்டும் எனில் ஏழு முதல் எட்டு சீன் ஆகியிருக்கும். ஆனால் நான் செய்ததோ அந்த காட்சியை ஃப்ரீஸ் செய்து. அனைத்து காட்சியும் அடுத்தடுத்து காட்சிப்படுத்தியிருப்பேன். எனக்குள் இருந்த யோசனைப்படி எப்படி எல்லாம் காட்சிப்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் எடுத்து முடித்தேன். அதன் பின்னர் மீதியை இசையமைப்பாளர் நிவர்த்தி செய்யட்டும் என்று முடிவு செய்து விட்டேன். படத்தை எடிட்டிங் செய்து பின்னணி இசைக்காக இளையராஜாவிடம் அனுப்பினேன்”.

”அவர் என்ன செய்ய போகிறாரோ..? என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்தேன். அந்தப் புல்லாங்குழலை தூக்கி எறியும் காட்சியிலிருந்து அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு காட்சிக்கும் 10 புல்லாங்குழல் கொண்டு பின்னணி இசை அமைத்திருப்பார். ஆரம்பம் முதல் முடிவு வரை எங்கு எப்படி இசை அமைக்க வேண்டும் என்று நன்கு கணித்து நான் எதிர்பார்த்ததை விட அற்புதமாக இசையமைத்து அந்தக் காட்சிக்கு உயிர் கொடுத்திருப்பார் இளையராஜா. இவ்வாறு இளையராஜா பற்றிய அனுபவங்களை பகிர்ந்துள்ளார் பாரதிராஜா”.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews