அய்யோ வடை போச்சே.. இனி இந்த ஆப்ஷன்ஸ் எல்லாம் இன்ஸ்டாகிராமில் இருக்காது.. 2கே கிட்ஸ் பாவம்..

By John A

Published:

சமூக வலைதளங்களின் தாக்கத்தால் என்று இளம் தலைமுறையினர் பெரும்பாலான நேரங்களை தங்களது மொபைல் போனிலேயே கழிக்கின்றனர். சோஷீயல் மீடியாக்களில் தங்களின் புகைப்படங்களைப் பதிவிடுவது, லைக்ஸ், பார்வைகளை அதிகரிக்க வித்தியாசமான செயல்களைச் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற செயலிகள் தான் இளம் தலைமுறையினரை அதிகம் ஆட்கொள்கிறது.

தங்களின் சொந்த நிகழ்வுகளைப் புகைப்படங்களாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றி லைக்குகளை அள்ளுகின்றனர். இப்படிப் புகைப்படங்களைப் பதிவேற்றும் போது சில வேளைகளில் தங்களது தோற்றம் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள பில்டர் ஆப்ஷன்களைப் பயன்படுத்துகின்றனர்.

ஹாட்ஸ்டாரில் சப்ஸ்கிரிப்சன் செய்த பெண்.. சிறு தவறினால் வங்கி கணக்கில் உள்ள பணம் காலி..!

இந்த பில்டர் ஆப்ஷன்கள் மூலம் தங்களது தோற்றத்தினை இயல்பை விட அழகாக்கி, பொலிவாக்கி பதிவிடும் போது அளவில்லா ஆனந்தம் அடைகின்றனர். ஆனால் இது தொடர்ச்சியாக இதே போன்ற ஃபில்டர் எபெக்டுகளைப் பயன்படுத்தும் போது அது ஒருவித மனநோயாகி விடுகிறது.

இந்நிலையில் மெட்டா நிறுவனம் இனி இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சோஷியல் மீடியாக்களில் இனி ஃபில்டர் ஆப்ஷன்களை எடுத்துவிடப்போவதாக அறிவித்துள்ளது. அழகை அதிகரித்துக் காட்டும் இந்த வகையான ஃபில்டர் ஆப்ஷன்கள் உண்மைக்குப் புறம்பான தோற்றத்தினைக் கொடுக்கிறது. இதனால் இளம் தலைமுறையினருக்கு தங்கள் உடலமைப்புக் குறித்த மன அழுத்தம் ஏற்படுகிறது. எனவே இதனை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நீக்கப் போவதாக அறிவித்துள்ளது.

ஃபில்டர் எபெக்டுகளில் தான் தங்களது தோற்றத்தையே இத்தனை நாட்களாகக் மாற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சி அளித்துள்ளது. எனினும் மெட்டா நிறுவனத்தின் இந்த முடிவுக்கு பலரும் ஆதரவு அளித்து கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.