வடிவேலு பண்ணல.. KPY பாலா உதவி செஞ்சான்.. நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பவா லட்சுமணன்!

Bava Lakshmanan: தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் பவா லட்சுமணன். இவர் வின்னர், ரோஜா கூட்டம், மாயி, காதல் சடுகுடு, ஏப்ரல் மாதத்தில், ஆனந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

இவர மாதிரிதான் இருக்கணும்… அப்போதான் முன்னேற முடியும்… வடிவேலுவை வச்சு செஞ்ச பிரபல காமெடி நடிகர்…

அப்போதைய காலகட்டத்தில் பிரபலமாக இருந்த பவா லட்சுமணன் தற்போது நடிக்க வாய்ப்பு இன்றி பொருளாதார ரீதியாக பல நெருக்கடிகளை சந்தித்துள்ளார். அதிலும் உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பவா லட்சுமணன் சர்க்கரை நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கால் கட்டை விரல் அகற்றப்பட்டிருந்த போது பல படங்களில் இணைந்து நடித்த வடிவேலு பார்க்க வந்தாரா என்ற கேள்வி கேட்கப்பட்டது.

தன்னையே ஏளனமாய் நினைத்த காமெடி நடிகர்… அவருக்காக கை கொடுத்த அஜித்… பின்ன தலனா சும்மாவா?

அதற்கு பதில் அளித்த பவா லட்சுமணன் அவர் தன்னை பார்க்கவும் வரவில்லை, தனக்கு எந்த உதவியும் செய்யவும் இல்லை என்று கூறியுள்ளார். அதோடு youtube இல் தன்னை பற்றி செய்தி வெளியானவுடன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் பிரபலம் பாலா தன்னை வந்து சந்தித்தார் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அதோடு அவர் தனக்கு பண உதவி செய்ததாகவும் மேலும் உதவிகள் வேண்டுமென்றால் தன்னிடம் கேட்குமாறு கூறியதாகவும் பவா லட்சுமணன் பகிர்ந்து இருந்தார். பவா லட்சுமணன் நடித்த மாயி திரைப்படத்தின் வாம்மா மின்னல் காட்சி அவருக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அந்த காட்சியை மீண்டும் மீண்டும் பாலா பார்த்ததாகவும் கூறியுள்ளார்.

காசில்லாமல் தெருவில் பட்டினி கிடந்த காமெடி நடிகர்.. முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து உயரம் தொட்ட அசத்தல் பின்னணி..

வீடு வேண்டுமென்றால் அட்வான்ஸ் வாடகையும் தான் கொடுப்பதாக பாலா பவா லட்சுமணன் அவர்களிடம் கூறியுள்ளார். தன்னை முதல் முறை பார்க்கும் பாலா இவ்வளவு பெரிய உதவி செய்ததை தன்னால் மறக்க முடியாது தனக்கும் பாலாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? எதற்காக எனக்கு உதவ வேண்டும் என்று பவா லட்சுமணன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.