இவர மாதிரிதான் இருக்கணும்… அப்போதான் முன்னேற முடியும்… வடிவேலுவை வச்சு செஞ்ச பிரபல காமெடி நடிகர்…

வடிவேலு தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த காமெடி நடிகர். இவரின் காமெடிகள் என்றாலே விரும்பாதவர்கள் என்று இருக்கவே முடியாது. அந்த அளவு தனது காமெடிகளால் மக்களை தன் வசம் கட்டிபோட்டவர் வைகைப்புயல் வடிவேலு.

தனது உடல் மொழியாலேயே பல காமெடிகளை கொடுத்தவர். இவர் ஆரம்பத்தில் காமெடி நடிகர்களுக்கே துணையாக நடித்து வந்தார். பின் தனது விடாமுயற்சியினால் தனி ஆளாக சினிமாவில் காமெடி நடிகராக நடிக்க தொடங்கினார். இவருக்கு துணைக்கு பல காமெடி நடிகர்கள் நடிக்கும் அளவுக்கு இவர் வளர்ந்தார்.

பழைய பன்னீர் செல்வமாக மாறிய சமந்தா!.. தாறுமாறு போட்டோக்களை போட்டு மாஸ் காட்டுறாரே!..

என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார். ஆரம்பத்தில் இவர் பெரிதளவில் பிரபலமடையாவிட்டாலும் இவர் நடித்த சிங்கார வேலன், கிழக்கு சீமையிலே போன்ற திரைப்படங்களின் மூலம் மக்களிடையே தெரிய ஆரம்பித்தார்.

பின் அஜித், விஜய்,ரஜினிகாந்த் என அனைவரின் திரைப்படங்களிலும் நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார். இவர் பொதுவாக தன்னுடன் இருக்கும் சக நடிகர்களுக்கு உதவும் குணம் இல்லாதவர். பொண்டா மணி, பாவா லெட்சுமணன் போன்ற நடிகர்கள் இதனை பல வீடியோக்கள் மூலம் வெளிப்படுத்தினர்.

சினிமாவில் வருவது நடித்து கொடுப்பது கிளம்புவது என இருக்கும் வடிவேலு தனது குடும்ப விழாக்களுக்கு கூட எந்த ஒரு நட்சத்திரங்களையும் அழைப்பதில்லை. இவரது இந்த செயலை குறித்து பிரபல காமெடி நடிகரான கஞ்சா கருப்பு தனது கருத்தினை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ராதிகாவாலதான் அந்த பட வாய்ப்பை இழந்தேன்… உண்மையை உடைக்கும் பிரபல நடிகை விஜி சந்திரசேகர்…

அதன்படி வடிவேலு தன்னுடம் டீ குடிக்க வருபவர்களுக்கு கூட பணம் கொடுக்க மாட்டார். யாருக்கும் உதவி என்று எதுவும் செய்ய மாட்டார். அவர் மிகவும் நல்லவர். அவர் யாருக்கும் பணம் கொடுத்து உதவி செய்யமாட்டார். அப்படி அவர் இருப்பதாலேயே இன்று வளர்ந்துள்ளார்.

மேலும் நான் அனைவருக்கும் உதவி செய்வதாலேயே இப்படி இருக்கிறேன். வடிவேலு மாதிரி இருந்தால் பிழைத்திருக்கலாம் என வடிவேலுவின் குணம் பற்றி இலைமறைக்காயாக தனது கருத்தினை பதிவிட்டுள்ளார் நடிகர் கஞ்சா கருப்பு.

கார்த்திய முதல்ல இத செய்ய சொல்லுங்க… பொளந்து கட்டும் கஞ்சா கருப்பு…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.