சிம்புவின் வீட்டுக்கு வந்த புது உறவு.. வைரல் புகைப்படம்!

நடிகை சிம்புவின் வீட்டுக்கு வந்த புது உறவை அடுத்து அவரது வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு என்பதும் அவருக்கு 40 வயதை நெருங்கி விட்ட நிலையிலும் திருமணம் ஆகவில்லை என்பதால் அவரது பெற்றோர்களான ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் திருமணத்திற்கு பெண் தேடும் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்புவின் சகோதரியான இலக்கியா என்பவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஹைதராபாத் சேர்ந்த அபிலேஷ் என்பவரை இலக்கியா திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் இலக்கியாவுக்கு தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து இலக்கியா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் சிம்பு குடும்பத்தினரும் உறவினர்களும் அதனை கொண்டாடி வருகின்றனர். மேலும் சிம்பு ரசிகர்களும் சிம்புவின் சகோதரிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்புவின் திருமணம் இந்த ஆண்டுகள் நடந்து விடும் என்றும் அவருக்கான பெண் தேடல் படலம் விரைவில் முடிந்து விடும் என்றும் சிம்புவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் சிம்புவுக்கு திருமணம் ஆக வேண்டும் என்று ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakkiya

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.