வில்லனாக நடிப்பில் பின்னியவர்.. சொந்த கட்சி தொடங்கிய பின் நடிகர் தேவனுக்கு நேர்ந்த நிலை..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ திரைப்படம் உள்பட பல திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர் நடிகர் தேவன். இவர் நடிகர் என்பதை தாண்டி வேறு சில துறைகளிலும் தனது கவனத்தை செலுத்தி உள்ளார்.

கேரள மாநிலத்தை சேர்ந்த இவர், சிறு வயதிலேயே நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் வலம் வந்தது மட்டுமின்றி அதற்காக பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். அதற்கு பலனாக திரையுலகில் நுழையும் வாய்ப்பும் தேவனுக்கு கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 380 படங்களில் நடித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு மலையாள படத்தில் அறிமுகமான தேவன், அதன் பிறகு ஒரே வருடத்தில் 5 படங்கள், 10 படங்கள் நடிக்கும் அளவுக்கு பிஸி ஆனார். கடந்த 1988 ஆம் ஆண்டு மட்டும் அவர் 18 படங்கள் நடித்தார். அதே போல, ஏராளமான படங்களில் நடிக்கக் கூட முடியாத அளவுக்கு அவர் பிஸியான நடிகராகவும் ஒரு கட்டத்தில் இருந்துள்ளார்.

devan 1

நடிகர் தேவன் கடந்த 1993 ஆம் ஆண்டு அர்ஜுன் நடித்த பிரதாப் என்ற திரைப்படத்தில் தான் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு ஜெய்ஹிந்த், கேப்டன், ஹானஸ்ட் ராஜ், போன்ற படங்களில் நடித்த நிலையில் பாட்ஷா படம் தான் அவருக்கு ஒரு திருப்புமுனையை கொடுத்தது. பாட்ஷா படத்தில் அதிரடி வில்லனாக நடித்திருந்த அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

இதனைத் தொடர்ந்து ரகசிய போலீஸ், மன்னவா, உல்லாசம், என் சுவாச காற்று, ராஜஸ்தான், பெரியண்ணா போன்ற படங்களில் நடித்தார். அவர் 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் மலையாளத்தில் பிசியாக இருந்தார்.  2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடித்த நிலையில் அதன் பிறகு அவர் தமிழில் நடிக்கவில்லை.

மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடிகர் தேவன் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான  ’சின்ன சின்ன ஆசை’ தொடரில் நடித்துள்ளார். அதன் பிறகு ஏராளமான மலையாள தொடர்களில் நடித்த நிலையில் மீண்டும் சன் டிவியில் கலசம் என்ற தொடரில் நடித்தார். தற்போது கூட அவர் ஒரு மலையாள சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

devan 2

இந்த நிலையில் நடிகர் தேவன் கேரள மக்கள் கட்சி என்ற ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார். ஆனால் அவரால் தொடர்ந்து கட்சியை நடத்த முடியாத நிலையில் அவர் கட்சியை பாரதிய ஜனதாவுடன் கடந்த 2021 ஆம் ஆண்டு இணைத்துவிட்டார்.  கேரள மாநில பாரதிய ஜனதா துணைத் தலைவராகவும் அவர் உள்ளார்.  அரசியல் மற்றும் சினிமா என இரண்டிலுமே தற்போதும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் தேவன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...