பாட்ஷா நடிகர் சேது விநாயகத்தை ஞாபகம் இருக்கிறதா? 100 படங்களுக்கு மேல் நடித்த கலைஞர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ என்ற படத்தை சொன்ன உடனே தங்கைக்கு மெடிக்கல் சீட் கேட்டு செல்லும் ரஜினியின் மாஸ் காட்சி தான் ஞாபகம் வரும். அந்த காட்சியில் மெடிக்கல் காலேஜ் உரிமையாளராக நடித்திருப்பவர்தான் சேது விநாயகம். அந்த காட்சியில் அவர் மிக சிறப்பாக நடித்ததை அடுத்து ரஜினியின் மிக நெருக்கத்துக்குரிய நபராகவும் மாறினார்.

சேது விநாயகம் கடந்த 1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 180ம் தேதி பிறந்தார். இவர் ஆரம்ப காலத்தில் விசுவின் நெருங்கிய நண்பர். விசுவின் நாடகக் குழுவில் பல வேடங்களில் நடித்துள்ளார்.

ரஜினியின் ‘பாட்ஷா’ பெயருக்கு சொந்தக்காரர்.. நடிகர் சரண்ராஜின் திரைப்பயணம்..!

தமிழ் சினிமாவில் இவர் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பெரும்பாலான படங்களில் இவர் வில்லன் வேடத்தில் தான் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தில்லுமுல்லு’ என்ற திரைப்படத்தில் அவருக்கு நண்பராக நடித்திருப்பார். இருப்பினும் பாட்ஷா படத்தில் நடித்த அவரது கேரக்டர் தான் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றது.

தில்லு முல்லு படத்தில் ரஜினியின் நண்பராக அறிமுகமாகி அதன் பிறகு சிம்ம சொப்பனம், புதிய தீர்ப்பு, சிதம்பர ரகசியம், ஊர்க்காவலன், மங்கை ஒரு கங்கை, உரிமை கீதம், புதிய வானம் உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். 1990-ம் ஆண்டு மட்டும் அவர் சுமார் 25 படங்கள் நடித்தார். அவரது கேரக்டர் அனைத்தும் அவருக்கு பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது.

குறிப்பாக காவலுக்கு கெட்டிக்காரன், அன்பு சங்கிலி, குணா, வானமே எல்லை, மகளிர் மட்டும், பாட்ஷா, செங்கோட்டை, உளவுத்துறை உட்பட சில படங்களில் நடித்தார். 2000 ஆண்டுகளிலும் அவர் பல படங்களின் நடித்தார். ஆனந்தம், சிட்டிசன், சாமி, மழை, கொக்கி, சாது மிரண்டால், பட்டைய கிளப்பு ஆகிய படங்களில் நடித்தார்.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக ரசிகர்கள் மனதில் இருக்கும் ‘பாட்ஷா’: இனிமேல் இப்படி ஒரு படம் வருமா?

நடிகர் சேது விநாயகம் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான வைதேகி என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் அந்த படமே அவரது கடைசி படமாக இருந்தது. சேதுபதி விநாயகம் அவர்களுக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர் கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி உடல் நல கோளாறு காரணமாக காலமானார்.

தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் ஒரு சில படங்களில் காவல்துறை அதிகாரியாகவும் நடித்து தனது திறமையை நிரூபித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...