ஐபிஎல் தொடரில்.. தோனியின் அரிதான சாதனை.. அசால்ட்டாக எட்டிப்பிடித்து சம்பவம் செய்த இளம் வீரர்..

நடப்பு ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு போட்டிகளும் மிகச் சிறப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அணிகளும் ஏறக்குறைய ஐந்து முதல் ஆறு போட்டிகளை ஆடி முடித்து விட்டனர். தற்போது உள்ள அடிப்படையின் படி டாப்பில் இருக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றிற்கு முன்னேறும் என்று நாம் எதிர்பார்த்தால் நிச்சயம் இரண்டாவது பாதியில் ஏதாவது ட்விஸ்ட் நடைபெறவும் வாய்ப்புள்ளது என்பது தான் ஐபிஎல் தொடரின் கடந்த சில சீசன்களில் வழக்கமாகவே உள்ளது.

சென்ற சீசனில், ராஜஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டு இருந்த நிலையில் கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து தோல்வியினால் அவர்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்திருந்தனர். அதேபோல புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலிருந்த மும்பை அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தனர்.

இதனால் தற்போதைய தொடரிலும் கூட இது போன்ற திருப்புமுனைகள் ஏற்படலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வரும் நிலையில் இதுவரை 6 போட்டிகள் ஆடியுள்ள டெல்லி அணி இரண்டு போட்டிகளில் தான் வெற்றி பெற்றுள்ளது. தங்கள் அணிகளில் உள்ள தவறுகளை எல்லாம் சரி செய்து கொண்டு தற்போது அதிக பலத்துடன் விளங்கும் டெல்லி அணி, கடைசி போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி இருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் 7 வது வீரராக வந்து ஆடிய ஆயுஷ் பதோனி மிகச் சிறப்பாக ஆடி அரைச்சதம் அடித்திருந்தார். இதனால், லக்னோவும் 167 ரன்கள் அடிக்க, இலக்கை நோக்கி அடிய டெல்லி அணியில் அறிமுக வீரர் ஜேக் ப்ரேசர் அரைச்சதம் அடித்திருந்தார். அவருடன் உறுதுணையாக ஆடிய ரிஷப் பந்த் 41 ரன்கள் எடுத்திருந்தார்.

இதனால், டெல்லி அணி வெற்றி பெற்ற சூழலில், லக்னோ வீரர் ஆயுஷ் பதோனி இந்த போட்டியில் படைத்த முக்கியமான ஒரு சம்பவத்தை பற்றி தற்போது பார்க்கலாம். ஏழாவது வீரராக களமிறங்கிய ஆயுஷ் பதோனி, அந்த இடத்தில் இறங்கி அடித்த இரண்டாவது அரைச்சததமாக இது மாறி உள்ளது. அப்படி இருக்கையில் தான் தோனியின் ஒரு முக்கியமான சாதனையை சமன் செய்துள்ளார் ஆயுஷ் பதோனி. ஏழாவது வீரராக களமிறங்கி அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் கொல்கத்தா வீரர் ரசல் ஐந்து அரை சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

இவரை தொடர்ந்து தோனி, பேட் கம்மின்ஸ், ஆகியோர் ஏழாவது வீரராக களமிறங்கி தலா இரண்டு அரைச்சதங்களை அடித்துள்ள நிலையில் தான் தற்போது அந்த வரிசையில் ஆயுஷ் பதோனியும் இடம்பிடித்து பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...