ரீ-ரிலீஸ் லிஸ்ட்டில் இணைந்த விஜய்சேதுபதி.. அடுத்தடுத்து வெளியாகப் போகும் VJS படங்கள்

புதுப்படங்களை விட இப்போது ரீ-ரிலீஸ் படங்களுக்குத்தான் மவுசு அதிகம் போல.. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய ரீ-ரிலீஸ் கலாச்சாரம் டிவி சீரியல்களையும் விட வில்லை. வசந்த மாளிகை, ஆயிரத்தில் ஒருவன், பாபா, விருமாண்டி என ஆரம்பித்து இன்று கில்லியில் வந்து முடிந்திருக்கிறது. இப்படி தமிழ் சினிமாவின் பெரிய தலைகள் படங்கள் அனைத்தும் ரீ-ரிலீசில் பட்டையக் கிளப்ப வருகிற மே1 அஜீத் பிறந்த நாளன்று பில்லா படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

கடந்த வாரம் வெளியான கில்லி திரைப்படம் புதிய படங்களுக்குப் போட்டியாக வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் தமிழ் சினிமாவில் கதைப் பஞ்சமே. விறுவிறுப்பாகவும், கமர்ஷியலாகவும் தமிழில் படங்கள் எடுப்பது குறைந்து சாதி ரீதியாக, நாவல்களை மையமாக வைத்து படங்கள் எடுப்பது அதிகமாகி வருகிறது.

காதலர் தினம் பட வாய்ப்பினை இழந்த பிரபல நடிகர்.. இருந்தபோதிலும் ஹிட் கொடுத்த முதல் படம்

ஆனால் பக்கத்து தேசமான கேரளாவிலோ இந்த ஆண்டின் துவக்கமே அம்சமாக இருந்திருக்கிறது. மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, பிரம்மயுகம், ஆவேசம் என அடுத்தடுத்து ஹிட்களைக் கொடுத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. இப்படி முன்னனி நடிகர்களின் படங்கள் ரீ-ரிலீஸ்-ல் சக்கைப் போடு போட இந்த லிஸ்ட்டில் தற்போது விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார்.

தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான மெரி கிறிஸ்துமஸ், காத்துவாக்குல ரெண்டு காத போன்ற படங்கள் சரியாகப் போகவில்லை. எனவே அடுத்து கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதனிடையே அவர் சினிமாவில் அடியெடுத்து வைத்த போது நடித்து ஹிட் கொடுத்த படங்களான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் போன்ற படங்கள் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு படங்களுமே காமெடியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டவை.

எனவே சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக மேற்கண்ட இரண்டு படங்களும் ரீ-ரிலீஸ் செய்யும் பணியை தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த இரண்டு படங்களும் ரி-ரிலீஸ் செய்யப்பட்டால் திரையரங்குகளில் மீண்டும் சிரிப்பு வெடி நிச்சயம் என்பதில் சந்தேகமேயில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...