அரசியல்வாதிய கண்ணு முன்னாடியே கொண்டு வந்துடுவாரு.. தமிழ் சினிமாவில் பல சாதனை செஞ்ச பாலாசிங்!

நடிகர் பாலாசிங், நாசர் நடித்து இயக்கிய ‘அவதாரம்’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரை உலகில் உள்ள குணச்சித்திர கேரக்டர்களிலும், வில்லன் கேரக்டர்களிலும் நடித்தவர். நடிகர் பாலா சிங் ஆரம்பத்தில் நாடக நடிகராக இருந்த சூழலில், அதற்காக அவர் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமா என்ற அமைப்பில் நாடகக் கலையை முறையாக பயின்றும் வந்தார்.

இதனைத் தொடர்ந்து நாசர் நடிப்பில் உருவான அவதாரம் என்ற திரைப்படத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு வில்லனாக அறிமுகமானார். இந்த படத்தில் அவர் வில்லனாக மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக, அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்திருந்தது. இதன் பின்னர் அவர் பிரபல இயக்குனர்களான ஷங்கர், மணிரத்னம், ஹரி, ஏஎல் விஜய், செல்வராகவன் ஆகியோர் இயக்கிய பல படங்களில் நடித்துள்ளதுடன் கமல்ஹாசனுடன் இணைந்தும் சில படங்களில் நடித்துள்ளார்.

bala singh2

நடிகர் பாலாசிங், கடந்த 2009 ஆம் ஆண்டு ’வண்ணத்துப்பூச்சி’ என்ற திரைப்படத்தில் தாத்தா கேரக்டரில் நடித்துள்ளார். அவர் தாத்தா மற்றும் பேர குழந்தைகளுக்கு இடையே உள்ள உறவை மிகவும் அற்புதமாக இந்த படத்தில் வெளிப்படுத்தி இருப்பார்.

அவதாரம் படத்திற்கு பிறகு அவர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் படத்தில் அரசு அதிகாரியாகவும், அஜித் நடித்த ஆசை மற்றும் உல்லாசம் படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இது தவிர ஆனந்த பூங்காற்றே, சந்தித்த வேளை, பாரதி, தீனா, கன்னத்தில் முத்தமிட்டால், சுந்தரா டிராவல்ஸ், சாமி, நள தமயந்தி உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

அவர் பெரும்பாலும் வில்லன் மற்றும் நாயக, நாயகிகளுக்கு தந்தை வேடத்தில் நடித்து வந்தார். மேலும் அரசியல்வாதி கேரக்டருக்கும் இவர் பொருத்தமாக இருப்பார் என்பதால், தனுஷுடன் புதுப்பேட்டை படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

இது தவிர சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் கலெக்டர் வேடத்தில் நடித்திருப்பார். கிராமத்து பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர் முதல் முதலமைச்சர் கேரக்டர் வரை இவர் நடித்து பலரையும் தன் பக்கம் வெகுவாக ஈர்த்திருப்பார்.

bala singh1

2021 ஆம் ஆண்டு வெளியான ’எங்கடா இருந்தீங்க இவ்வளவு நல்லா’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த பாலாசிங், தமிழ் மட்டுமின்றி பிறமொழி படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக மலையாளத்தில் கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்துள்ள அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள அவர், சூலம், ருத்ர வீணை, நல்ல நேரம், ஆதித்ரா, கேளடி கண்மணி, வானத்தைப்போல, கயல் உள்பட பல முக்கியமான தொடர்களில் தடம் பதித்துள்ளார்.

நடிகர் பாலாசிங், கடந்த 2019 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக காலமானார். அப்போது அவருக்கு வயது 67. நடிகர் பாலாசிங், காலமானாலும் அவரது நடிப்பு இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.