Bala Siva

Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

karunanidhi jayalalitha

1991ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் ஊழலுக்கு எதிராக சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்தர்.. 1996ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் அதற்கு பதிலடி கொடுத்தார்… அதன்பின் 2001ல் இருந்து இரு கட்சிகளுமே ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கில் வந்துவிட்டது.. 25 வருடங்கள் கழித்து இப்போது தான் மீண்டும் ஊழலுக்கு எதிரான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. 3வது பிளேயர் வந்தவுடன் தான் இரண்டு பேரும் செய்த ஊழல் வெளியாகிறது..

அக்டோபர் 28, 2026, 07:51
others vs vijay3

விஜய்க்கு இப்போதே 35% வாக்கு இருக்குது.. 2031ல் இன்றைக்க்கு 13 வயசு இருக்குறவங்களுக்கு ஓட்டு போடும் வயது வரும்.. அப்போது விஜய்யின் வாக்கு சதவீதம் 40ஆக உயரும்.. 2036ல் இன்றைக்கு 8 வயசு இருக்குறவங்களுக்கு ஓட்டு போடும் வயசு ஆகும்.. அப்போது தவெக வாக்கு சதவீதம் 45ஆக உயரும்.. இப்படி ஒவ்வொரு தேர்தலுக்கும் விஜய்யின் வாக்கு சதவீதம் அதிகரிச்சு கிட்டே போகும்..

அக்டோபர் 27, 2026, 20:59
vijay modi stalin

பாஜகவுடன் அதிமுக கூட்டணியே வைத்துள்ளது.. பாஜகவுடன் திமுக கள்ள உறவு வைத்துள்ளது.. பாஜக ஆதரவில் தான் தனுஷே அரசியலுக்கு வரப்போகிறார்.. பாஜக மறைமுக ஆதரவில் தான் அண்ணாமலை புது அமைப்பையே தொடங்கியிருக்கிறார்.. விஜய் மட்டும் தான் பாஜகவை உண்மையாக எதிர்க்கிறார்..

அக்டோபர் 27, 2026, 20:00
mgr jayalalitha eps

1996க்கு பின் ஊழல் வழக்கில் ஒரு அரசியல்வாதியும் கைது செய்யப்படவில்லை.. ராஜேந்திர பாலாஜி போன்ற ஒருசிலர் விதிவிலக்கு.. கருணாநிதி, ஜெயலலிதா, ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் ஆட்சியில் ஊழலுக்காக வழக்கு போட்டார்களே தவிர அதன்மீது நடவடிக்கை என்பதும் கைது என்பதும் சுத்தமாக இல்லை..

அக்டோபர் 27, 2026, 16:23
vijay cm seat

4 அமைச்சர்கள் மீது வழக்கு போட்டு 2 அமைச்சர்களின் ஊழலை நிரூபித்து தண்டனை வாங்கி கொடுத்துட்டா திமுகவின் இமேஜ் சரியும்.. விஜய்யின் இமேஜ் உயரும்.. இதுதான் முதலமைச்சர் விஜய்யின் லாப கணக்கு.. ஒரே நேரத்தில் ரெண்டு மாங்காய்.. ஒன்னு ஊழலை ஒழிக்க வந்தவர் விஜய் என்ற இமேஜ்.. திமுக ஊழல் கட்சி என்ற முத்திரை..

அக்டோபர் 27, 2026, 15:50
vijay modi stalin

12 வருடங்கள் மத்தியில் பவர்ஃபுல் அரசாக இருக்கும் பாஜகவால் ஒரு திமுக அமைச்சரை கூட தொட முடியவில்லை.. செந்தில் பாலாஜியை கைது செய்வது போல் பாவ்லா செய்து தனக்கு தேவையானதை சாதித்து கொண்டதை தவிர வேறு இல்லை.. ஆனால் 5 மாதங்களில் ஒரு அமைச்சரை தவெக அரசால் கைது செய்து சிறையில் அடைக்க முடிகிறது.. ஏன்?

அக்டோபர் 27, 2026, 14:58
whip in cm vijay hand

பூனைக்கு மணி கட்டிவிட்டார் முதலமைச்சர் விஜய்.. இதற்கு முன் நடந்த ஜெயலலிதா மீதான வழக்கு உள்பட பல வழக்குகள் அரசியல்ரீதியானவை.. ஊழலை ஒழிக்கும் நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டவை அல்ல.. முதல்முறையாக தமிழ்நாட்டில் ஊழலை ஒழிக்கும் வகையில் ஒரு கைது நடவடிக்கை நடந்துள்ளது.. அன்பில் மகேஷ் ஒரு டிரைலர் தான்.. இனிமேல் தான் மெயின் பிக்சரே இருக்குது.

அக்டோபர் 27, 2026, 12:10
anbil family

அன்பில் தர்மலிங்கமும் கருணாநிதியும் நண்பர்கள்.. அன்பில் பொய்யாமொழியும் ஸ்டாலினும் நண்பர்கள்.. அன்பில் மகேஷும் உதயநிதியும் நண்பர்கள்.. மூன்று தலைமுறை நட்பு இப்போது ஒரே ஒரு வழக்கால் விரிசலா? 3 தலைமுறை நட்பே முறியும்போது அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்து அமைச்சரானவர்களின் கதி என்னவாக இருக்கும்?

அக்டோபர் 27, 2026, 11:29
vijay target dmk

ஒரே ஒரு கைதுதான்.. ஆட்டம் காணுகிறது திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட்டம்.. அவசர அவசரமாக தவெகவில் சேர தூது அனுப்பும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இந்நாள் எம்.எல்.ஏக்கள்? விஜயபாஸ்கரை சேர்த்தது போல் திமுகவில் இருந்து வருபவர்களும் தவெகவில் சேர்க்கப்படுவார்களா?

அக்டோபர் 27, 2026, 10:40
vijay chandrababu naidu

தமிழ்நாட்டுக்கு சேர வேண்டியதை கரெக்டா கொடுத்துருங்க.. மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்க மாட்டோம்.. சந்திரபாபு நாயுடு மூலம் முதல்வர் விஜய் ரகசிய தகவலா? ஏர்போர்ட் தனியார்மயமாக்கல், விமான எரிபொருளுக்கான வரி குறைப்பு ஆகியவை மத்திய அரசுக்கு கொடுக்கும் சமாதான சைகைகளா?

அக்டோபர் 27, 2026, 08:40
stalin anbil udhayanidhi

ஸ்டாலின் அறிக்கையில் அன்பில் மகேஷ் இந்த பிரச்சனையை சட்டரீதியாக எதிர்கொள்வார் என்று தான் உள்ளது.. அன்பில் மகேஷுக்கு திமுக துணை நிற்கும்.. திமுக சட்ட வல்லுனர்கள் துணை நிற்பார்கள்.. கட்சி அவருக்கு எல்லாவிதமான ஆதரவையும் தரும் என்று ஒரு வார்த்தை கூட இல்லை

அக்டோபர் 27, 2026, 08:10
anbil udhayanidhi

அன்பில் மகேஷை கைது செய்ததன் மூலம் உதயநிதிக்கு மெசேஜ் கொடுக்குறாரா முதலமைச்சர் விஜய்? உங்க நண்பரை தூக்க தெரிந்த எனக்கு, உங்களை தூக்க ரொம்ப நேரம் ஆகாது என்பது தான் அந்த மெசேஜா? திமுக ஒரு தீயசக்தி, ஊழல் சக்தி என்பதை இன்றைய இளைஞர்கள் மத்தியில் பதிய வைக்கும் ஒரு முயற்சியா?

அக்டோபர் 27, 2026, 07:40