சினிமாவில் இருந்த விஜய் அரசியலுக்கு வந்தார், அப்போது விஜய் சினிமா மார்க்கெட்டையும் இழந்துவிடுவார், அரசியலிலும் தோல்வி அடைந்துவிடுவார் என்று சொன்னார்கள்.. ஆனால் மக்கள் என்ன செய்தார்கள், சினிமாவை மறந்துவிட்டு அரசியலுக்கு வந்துவிட்டார்கள் அக்டோபர் 10, 2026, 13:59
2029 நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக ஒரே கூட்டணியில்? இன்னொரு பக்கம் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ்..இந்தியா கூட்டணி அகில இந்திய அளவில் எப்படி வெற்றி பெறுகிறது என்பது தெரியாது.. ஆனால் தமிழ்நாட்டை பொருத்தவரை விஜய்யால் 40க்கு 40 கன்பர்ம்.. அப்ப தான் தெரியும்.. திமுக, அதிமுக சேர்ந்தாலும் விஜய்யை ஜெயிக்க முடியாதுன்னு.. அக்டோபர் 10, 2026, 13:30
டீ குடிச்சாரு, டிராக்டர் ஓட்டினாரு, முருங்கைக்காய் பறிச்சாரு.. அதனால் தான் ஓட்டு விழுந்துச்சாம்.. திமுக பேச்சாளர் நக்கலா சொல்றாரு.. ஆமா அதுக்கு தான் ஓட்டு போடுவாங்க.. அப்புறம் தண்ணி வருது.. பல்டி பாமான்னு சொல்றவங்களுக்கா ஓட்டு போடுவாங்க.. அக்டோபர் 10, 2026, 12:55
அரசியலில் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது.. வல்லவராகவும் இருக்க வேண்டும்.. முழுக்க முழுக்க நல்லவராக இருந்த காமராஜர் தோல்வி அடைந்தார்.. வல்லவராகவும் இருந்ததால் தான் எம்ஜிஆர் சாகும் வரை முதல்வராக இருந்தார்.. விஜய் இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.. அக்டோபர் 10, 2026, 10:59
தமிழ் தேசியம் என்ற ஒரே ஒரு சொல்லை வைத்து 15 வருடங்களாக ஏமாற்றி கொண்டிருக்கும் கட்சி நாம் தமிழர் கட்சி.. ஒரே ஒரு சதவீத ஓட்டு கூட வாங்க வக்கில்லாமல் எதற்காக கட்சி நடத்துகிறீர்கள்.. ஒரே ஒரு தேர்தலிலாவது டெபாசிட் வாங்க முடியுதா? அக்டோபர் 10, 2026, 10:26
நேற்று ரிசல்ட் இன்று கட்சி தாவல்.. அதிமுக, திமுக எம்.எல்.ஏக்கள் வரிசை கட்டி தவெகவுக்கு வர தயார்.. இதுவரை 20 எம்.எல்.ஏக்கள் என தகவல்.. நாங்கள் ராஜினாமா செய்தாலும் விஜய் எங்களை மீண்டும் ஜெயிக்க வைப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக தகவல்.. அக்டோபர் 10, 2026, 09:47
கருணாநிதி, ஜெயலலிதாவை விட விஜய் அபாயகரமானவர்… கருணாநிதியால் கடைசி வரை அதிமுகவை அழிக்க முடியவில்லை.. ஜெயலலிதாவால் கடைசி வரை திமுகவை அழிக்க முடியவில்லை.. ஆனால் விஜய் அதிமுகவை கிட்டத்தட்ட கரைத்துவிட்டார்.. அக்டோபர் 10, 2026, 09:04
எத்தனை ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தார் என்பது இன்னும் 10 நாள் கழிச்சு கேட்டா யாருக்கும் ஞாபகம் இருக்காது.. ஆனால் தாராபுரம் இடைத்தேர்தலில் யார் ஜெயித்தாங்கன்னு 10 வருஷம் கழிச்சு கேட்டாலும் தவெக ஜெயிச்சதுன்னு ஞாபகம் இருக்கும். அக்டோபர் 10, 2026, 08:45
118 வரும் வரை விஜய் எல்லா இடைத்தேர்தலிலும் பிரச்சாரம் செய்வார்.. பிரச்சாரம் செய்து தான் ஆக வேண்டும்..இப்போதைக்கு விஜய் முகம் மட்டும் தான் ஓட்டு வாங்கும் இயந்திரம்.. பரிட்சை எழுதுபவர் படித்து தான் ஆகனும்.. தேர்தல்ல ஜெயிக்கனும்ன்னா முதலமைச்சராக இருந்தாலும் பிரச்சாரம் செய்து தான் ஆகனும்.. அக்டோபர் 10, 2026, 08:25
இப்ப கூட திமுக தன் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.. ஸ்டாலின் 10 பக்கத்திற்கு ஒரு அறிக்கையை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.. சினிமா கவர்ச்சி, பண பலம், போலீஸ் பலம், மக்களை மிரட்டியதாக புலம்பியுள்ளார். மக்கள் கொடுத்த வெற்றியை எப்போது கொச்சைப்படுத்த ஆரம்பித்துவிட்டீர்களோ, அப்போதே நீங்கள் மக்கள் மனதில் இருந்து விலகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.. அக்டோபர் 9, 2026, 20:23
ஒருமுறை ஜெயித்தால் அது சாதனை.. அடுத்தடுத்து வெற்றி பெற்றால் அது சாதனையின் தொடர்ச்சி.. இன்ஸ்டாவால் வெற்றி.. குழந்தைகளை ஏமாற்றி வெற்றி.. நடிகர் என்ற கவர்ச்சி.. இந்த வெற்றி ஒருமுறைதான் கிடைக்கும்.. இந்த வெற்றி நிலைக்காது.. இனிமேல் இந்த காரணங்களை சொல்ல முடியாது.. அக்டோபர் 9, 2026, 19:56
திமுக சென்ற முறை வாங்கிய வாக்குகளை விட மதுராந்தகத்தில் சுமார் 4% வாக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தாராபுரத்தில் 32% வாக்குகளை தக்கவைத்துள்ளது. இதற்கு கூட்டணி இல்லாதது ஒரு பெரிய காரணம்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் ஓட்டுக்கள் இல்லை என்பது பெரிய மைனஸ்.. அக்டோபர் 9, 2026, 17:23