நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம்: அப்பா-அம்மா ஆகப்போகும் அட்லி-ப்ரியா

அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா திருமணமாகி எட்டு ஆண்டுகள் கழித்து கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

atleepriya  கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி அட்லி – பிரியா திருமணம் நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் திருமணம் ஆகி 8 ஆண்டுகள் கழித்து அட்லி மனைவி பிரியா தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்லி தெரிவித்துள்ளதோடு தனது மனைவி பிரியா கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

atleepriya1

மேலும் நாங்கள் கர்ப்பமாகி உள்ளோம் என்றும் எங்கள் குடும்பம் வளர்ந்து வருகிறது என்றும் எங்கள் குடும்பத்திற்கு உங்களது வாழ்த்துக்கள் தேவை என்று அட்லி பதிவு செய்துள்ள நிலையில் அட்லிக்கும் அவரது மனைவிக்கும் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா, நயன்தாரா நடித்த ‘ராஜா ராணி’ என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் இயக்கிய அட்லி தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

atleepriya2

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.